தியானம் (Meditation)


இந்த இணையத்தில் தருவது உங்கள் 

நேரமல்ல

 சிந்தனையின் முக்கியத்துவம்


தியானம்(Meditation)




தியானம் என்றால் என்ன?


Mediation picture


தியானம் என்னவேன்று கேட்டால் அனைவரும் கூறுவது அது ஒரு அமைதியாக இருப்பது என்று கூறுவார்கள். ஆனால் தியானம் என்பது வெறும் அமைதியாக இருப்பது மட்டுமல்லாமல் மனதையும் எண்ணங்களையும் ஒரு நிலை படுத்துதல். அவை மற்றும் தியானம் அல்ல நம் உயிர் மற்றும் உடல்பற்றி அறிந்து கொள்வது தான் தியானம். நம் உயிர் மற்றும் உடல் எவ்வாறு இயங்குகிறது என்றால் பஞ்ச பூதங்கள் சக்தியால் இயங்குகிறது.


பஞ்ச பூதங்கள்


  • நீர்
  • நெருப்பு
  • காற்று
  • ஆகாயம்
  • நிலம்
5 பூதங்கள்



பஞ்ச பூதங்களுக்கும் தியானத்திற்கும் என்ன தொடர்பு ?🤔


நாம் தியான பயிற்சி செய்கின்றபோது இறைவனை நினைத்துத் தியானம் செய்கின்றோம். இறைவனும் பஞ்ச பூதங்களும் ஒன்று தான் என்கிறார்கள் எப்படி.




எப்படி என்று பார்க்கலாம் 

ஆகாயம்   -பரவெளி.இதன்ஓசை ய.
காற்று(வாயு)-புகை.இதன்ஓசைவா.
நெருப்பு       -அக்னி.இதன்ஓசை  சி
நீர்                     -  மழை.இதன்ஓசை ம.
நிலம்             -    மண்.இதன் ஓசை .
  
யவாசிமந என்று பஞ்ச பூதங்களின் ஓசை உள்ளது. அதை நாம் வரிசை படுத்தி பார்த்தால் நமசிவாய என்று வருகிறது. இவ்வருதான் பஞ்ச பூதங்களும் இறைவனும் ஒன்று என்கிறார்கள். தியானம் செய்யும் பொழுதுு ஒருவருக்கு மன அமைதி கிடைக்கும் மற்றும் தியானம் செய்வதால் ஒருவித பிரகாசமான உணர்வு கிடைக்கும். தியானம் பயிற்சி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டால். முதலில் குறைந்தபட்ச அளவு 10 நிமிடங்கள் மேற்கொள்ளவும், பிறகு நாள்தோறும் தியாான பயிற்சி செய்யும்பொழுது பயிற்சி செய்யும்  நேரத்தை அதிகரித்துக் கொண்டே வர வேண்டும். தியானம் செய்வதால் அனைவரது மனமும் ஒன்றிணைந்து இருக்கும். ஆதலால் வீட்டில் ஒருவர் தியான பயிற்சி மேற்கொண்டாலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் நன்மை உண்டாகும். தியானப் பயிற்சி செய்யும்பொழுது நம் மனம் மற்றும் உடல் தூய்மை பெறும். தியானப் பயிற்சி பல வகைகள் உள்ளன ஏனென்றால் ஒவ்வொரு மனிதனின் மனம் வேறுபடும் ஆதலால் தியானம் வேறு வகைகளில் உள்ளன. ரிக்கி தியானம், சக்கரங்கள் தியானம், இறைவனை நினைத்துச் செய்யும் தியானம் மற்றும் பல வகைகள். தியானத்தின் மூலக்கூறு ஒரு பொன்னிறமான பிரபஞ்ச ஆற்றலை நினைத்துச் செய்யும் பயிற்சி. பிரபஞ்ச ஆற்றலைை பற்றிப் பின்வரும் பகுதியில் நாம் காணலாம். ஒருு அறையில் இருவர் தியானம் செய்தால் அவரின் மூளையின் எண்ண ஓட்டம் இருவருக்கும் ஒரே போல் இருக்கும். தியானம் செய்து கொண்டு நாள்தோறும் இருந்தால் பிரபஞ்சத்தைப் பற்றி நன்கு அறியலாம். தியானம் என்றாலே முதலில் கூறுவதுு குண்டலினி தியானம் என்று அனைவரும் கூறுவார்கள். குண்டலினி தியானத்தைப் பற்றிப் பின்வரும் பகுதியில் கூறுகிறோம். எப்பொழுதும் மன அமைதிக்கு தியானம் செய்யுங்கள் தியானம் செய்வதால் உங்களின் அனைத்து வித நன்மைகள் நடக்கும் ஆதலால் நம்மால் முடிந்த அளவு நேரங்களில் தியானம் செய்யுங்கள். நாம்் இவ்வுலகில் எதற்காகப் பிறக்கிறோம் என்றால் நம் உயிரின் சக்தி அளவை தியான பயிற்சியின் மூலம் அதிகரித்துக் கொள்வதற்காகத் தான். தேவையற்ற பொருட்கள் மற்றும் அதன் மீது ஆசைப்படுவது அனைத்தும் ஒரு மாயை அதாவது மாயத்தோற்றம். மாயை தோற்றத்திற்கு உதாரணமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் பொழுதுபோக்குக்காகக் காணப்படும் திரைப்பட உலகம் ஒரு மாய தோற்றம் ஆகும் எவ்வாறென்றால் நாம் செய்ய முடியாத ஒன்றை செய்து காட்டுவது தான் சினிமாவுலகம் ஆகவேதான் மாயத் தோற்றம் என்று கூறுவார்கள். தியான பயிற்சியின் மூலம் நம்மில் உள்ள அனைத்து விதமான உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி அதை நாம் கட்டுப்படுத்த முடியும். மனது அமைதி கொண்டால் அனைத்து விதமான நல்ல செயல்கள் நடக்கும் மனதை அமைத்துக் கொள்வதற்கு தியானமே மிக முக்கியமான பயிற்சி ஆகும்.



கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.
(மேலும் புத்தம் புதிய  சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள்  subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்து கொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).






மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏





அடுத்த பதிவில் பார்ப்போம்👆....

கருத்துரையிடுக

0 கருத்துகள்