இந்த இணையத்தில் தருவது உங்கள்
நேரமல்ல
சிந்தனையின் முக்கியத்துவம்
மனதின் ஆற்றல்
(The power of the mind)
அனைவரும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை நம் மனதிற்கு மிகுந்த ஆற்றல் உள்ளது.அந்த மனதின் ஆற்றலைக் கொண்டு நாம் எவ்வித செயல்களையும் மற்றும் எவ்வித சக்திகளையும் பெறலாம்.
நான் முன்பே நமது பதிவில் ஒரு பகுதியில் கூறி உள்ளோம் என்னவென்றால் நம் மனதின் ஆற்றல் மூளையை விட நூறு மடங்குச் சக்தி வாய்ந்தது என்று கூறி உள்ளோம். அதன் அடிப்படையில்தான் இப்போது மனதின் ஆற்றலைப் பற்றி நன்கு விரிவாக இப்பதிவில் தெரிந்துகொள்ளுவோம்.
மனதின் ஆற்றல்
மனதின் ஆற்றல் என்றாலே ஆழ் மனதின் ஆற்றல் என்று தெரிந்து கொள்ளுங்கள். நாம் மனதில் நினைப்பது அனைத்தும் நடக்கும். நம் மனதிற்கு நான் சிந்திப்பதை விட நூறு மடங்கு ஈர்ப்பு சக்தி உள்ளது. ஈர்ப்பு சக்தியைப் பற்றி நன்றாக இரகசியம்(The secret) என்னும் புத்தகத்தில் எழுதி உள்ளார்கள் அல்லது இரகசியம்(The secret) என்று ஒரு குறும்படம் உள்ளது அதைத் தெரிந்து கொள்ளுங்கள். நம் இனத்தின் மற்றவர்கள் பதிவைை விளம்பரம் செய்யவில்லை, எங்களின் பதிவைப் படித்துச் சிந்தனைகளை உயர்த்தி மற்றும அனைத்தும் தெரிந்து கொள்வதற்காகத் தான் பதிவிடுகிறோம்.
அந்த ரகசியத்தின்புத்தகத்தில் என்ன கூறுகிறார்கள் என்று சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நம் மனதிற்கு அபரிமிதமான சக்தி உள்ளது என்றும் அந்தச் சக்தியைக் கொண்டு நாம் எவ்வித செயல்களிலும் வெற்றி பறலாம் என்று கூறியிருக்கிறது.
அந்தப் புத்தகத்தில் கூறுவது சரிதான் நாம் மனதில் நினைப்பது அனைத்தும் நமக்குக் கிடைக்கும் ஆனால் அதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.நம் மனம் நாம் நினைப்பதை ஈர்த்து நமக்கான சரியான பாதையை வகுக்கும் ஆனால் நாம் அதை மதிக்காமல் அப்பாதையை தவறு என்று விட்டுவிடுவோமா போல் தான் நாம் நினைப்பது நடப்பதில்லை.
நான் மனதிற்கு மிகுந்த ஆற்றல் உள்ளது அதில் நாம் எப்போதும் நேர்மறை சிந்தனைகளைக் கொண்டிருக்க வேண்டும். எத்தனை முறை சிந்தனைகளால் நாம் நினைப்பது எதுவும் நடக்காது உதாரணமாக நான் இப்பொழுது ஒரு 50 ஆயிரம் வேண்டும் என்று மனத்தில் நினைத்து அதைக் கேட்கிறோம் என்றால் அதற்கான சரியான பாதை நமக்குக் கிடைக்கும், அப்பொழுது நாம் பாதையில் செல்லும்பொழுது நமக்கு நேர்மறை சிந்தனைகள் இருக்க வேண்டும். அவ்வாறு நாம் நேயமாய் சிந்தனைகளோடு இருந்தால் நாம் விரும்பிய பொருள் நமக்குக் கிடைக்கும்.நம் மனதின் எதிர்மறை சிந்தனைகளாக இருந்தால் உதாரணமாக அந்த ஐம்பது ரூபாய் வைத்திருந்தால் யாராவது திருடிக்கொண்டு போய் விடுவார்களோ அப்படி என்றால் எதிர்மறைச் சிந்தனைகள் இருந்தால் நாம் எவ்வளவுதான் ஈர்ப்பு விதியைச் சரியாகக் கடைப்பிடித்தாலும் நமக்கு நாம் நினைத்த பொருள் கிடைக்காது, ஆதலால் எப்போதும் மனதில் நேர்மறை சிந்தனைகள் இருக்க வேண்டும்.
நாம் மனதில் நினைப்பது எது வேண்டுமானாலும் நடக்கும் நாம் மனவலிமையை உறுதியாகவும் மற்றும் தூய்மையாக இருக்க வேண்டும். ஒரு உண்மை சம்பவங்களைக் கூறுகிறேன்.
வெளிநாட்டில் ஒரு இளைஞன் 11 மாடி கட்டிடத்திலிருந்து குதிக்கும்பொழுது அவன் மனதார என்ன நினைத்தான் என்றால் நான் இங்கே இருந்து கீழே குதித்தாலும் நான் இறக்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறிக்கொண்டே அங்கிருந்து குதித்தான்.அனைவரும் பருத்தித்துறை மற்றும் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஏனென்றால் யாராக இருந்தாலும் இரண்டாவது மாடியிலிருந்து குதித்தார் இறந்து விடுவார்கள் ஆனால் இவர் 11-வது மாடியிலிருந்து குதிக்கிறார் என்றால் கண்டிப்பாக இறந்து விடுவார் என்று நினைத்து வருத்தப்பட்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அவர் கீழே விழுந்தவுடன் அனைவரும் சென்று பார்த்தார்கள் அப்பொழுது அவர் பலத்த அடி இரத்தம் காயங்கள் அனைத்தும் சற்று அதிகமாக இருந்தது. அனைவரும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் சிறிது நேரம் கழித்து, அவர் அவசர ஊர்திக்கு அவரின் ரத்த காயங்கள் அனைத்தும் சரி செய்வதற்காகக் கீழே விழுந்தவர் எழுந்து நடந்து சென்றார். நாம் இது சொன்னது மனதிற்கு இவ்வளவு ஆற்றல் உள்ளது என்பதற்காக அதற்காக நாமும் முயற்சிக்கலாம் என்று நினைத்து முயற்சித்தால் அது மிகுந்த ஆபத்தைக் கொண்டு முடியும். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவே நடக்கிறது ஆதலால் எப்பொழுதும் எதிர்மறை சொற்களை உபயோகிக்காதீர்கள் மற்றும் இவ்வுலகில் ஒவ்வொரு உயிரும் பிறந்தபிறகு அனைத்து உயிர்களுக்கும் அனைத்து உயிரும் துணை அதனால் எப்பொழுதும் நமக்கு நாமே என்று கூறி விடக் கூடாது.
நாம் அனைத்துப் பதிவுகளும் இந்த வார்த்தையைக் கூறிக் கொண்டே இருக்கிறோம் என்னவென்றால் தியானம்.
தியானம் செய்யுங்கள் தானத்தில் நம் மனம் நேர்மறை சிந்தனைகளை நோக்கிச் செல்லும் எதிர்மறைச் சிந்தனைகள் நமக்கு எப்போதும் வராது. நாம் தியானப் பயிற்சியைத் தினமும் செய்யும்போது நமக்கு நேர்மறை சிந்தனைகள் உயரும் மற்றும் இறை நிலைக்குச் செல்வம்.தியானத்தை கொண்டு ஆழ் மனதை நன்கு புரிந்துகொள்ள முடியும் மற்றும் ஆழ் மனதின் ஆற்றலை நன்கு தெரிந்து கொள்வோம்.
சில உண்மை சம்பவங்கள் கூறுகிறேன்.
குறிப்பு : கீழே குறிப்பிடப்படும் உண்மை சம்பவங்கள் அனைத்தும் நாம் தெரிந்து கொள்வதற்கு நம் மனதின் ஆற்றலைப் பற்றி யாரும் முயற்சிக்க வேண்டாம் அவ்வாறு முயற்சித்தால் ஆபத்தில் கொண்டு சேரும்....
ஆங்கிலேய ஆட்சி கலத்தில் ஒரு சித்தர் ஆங்கிலேயரிடம் ஒரு சவால் விட்டுப் பேசியுள்ளார் நான் 21 நாட்கள் மண்ணுக்குள் இருக்கிறேன் என்று கூறி உள்ளார்.ஆங்கிலேயரும் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு அந்தச் சித்தரை ஒரு சவப்பெட்டியில் அடைத்து மண்ணுக்குள் மூடி வைத்து விட்டார்கள் 21 நாட்களும் அவர்கள் இருந்திருக்கிறார்கள். அந்தச் சித்தர் அவரின் மனதை நன்கு புரிந்து மற்றும் ஆழ் மனதின் சக்திவேல மூலமாக 21 நாட்கள் உயிருடன் இருந்துள்ளார்.21 நாட்கள் கழித்து மீண்டும் மண்ணிலிருந்து அந்தச் சித்தரை வலி எடுக்கும்போது அவர் உயிருடன் இருந்து இருக்கிறார்.
மற்றுமொரு உண்மை : வடநாட்டை சேர்ந்த ஒரு சித்தர் சில ஆண்டுகளாக உணவு உண்ணாமல் தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழ்ந்து வந்திருக்கிறார். உயிருடன் ஒரு மனிதன் இவ்வாறு வாழ முடியும் உணவு உண்ணாமல் தண்ணீர் குடிக்காமல் என்று ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள். அந்தச் சித்தரை ஒரு அறையில் கேமராக்கள் வைத்து ஒரு வாரம் அவரைக் கண்காணித்து இருந்தார்கள். அவ்வாறு கண்காணிக்கும்பொழுது அவர் அந்த ஒரு வாரத்தில் ஒரு நாள் கூடத் தண்ணீர் அருந்தவில்லை மற்றும் உணவு உண்ணவில்லை அதைக் கண்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.
நம் மனதைக் கொண்டு நம் உடலின் இவ்வளவு வேண்டுமானாலும் சூடாக வைத்துக்கொள்ள முடியும். அதேபோல்தான் ஒருவரின் ஒருவர் தன் மனதின் சக்தியைக் கொண்டு அவர் உடலைச் சூடாக்கி வைத்தார். அதைப் பரிசோதிக்க விஞ்ஞானிகள் ஒரு மிகுந்த குளிர்ந்த நீரில் அவரை அமரும்படி கூறியுள்ளார்கள் அதே போல் அவரும் அமர்ந்து உள்ளார் அரை மணி நேரமாக அந்தக் குளிர்ந்த நீரில் அமர்ந்து இருந்ததால் அவரின் உடல் நிறை ஒன்றும் ஆகவில்லை அவர் மனதில் நினைத்தபடி அவரின் உடலைச் சூடாக்கிக் கொண்டு அமர்ந்திருக்கிறார்.
அந்தக் காலத்தில் சித்தர்கள் இதை அனைத்தும் தான் கூறியுள்ளார்கள் நம் மனதை நன்கு அறிந்து கொண்டால் மட்டுமே தான் நாம் இறை நிலையை அடைய முடியும் என்று.அவ்வாறு நாம் தியானம் செய்யும்போது நாம் உடல் மற்றும் இவ்வுலகில் இருப்பது அனைத்தையும் கடந்து நம் மனதின் ஆழம் வரை சென்று கடவுளை நினைப்பதுதான் இறை நிலையை அடைவது. நம் மனதில் எப்போதும் நேர்மறை சிந்தனைகள் மட்டுமே இருக்க வேண்டும் பிறகு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது நாம் மன்னிப்பு அல்லது நன்றி உணர்வை வெளிப்படுத்தினால் நாம் மனம் தூய்மை அடைந்து நேர்மறை சிந்தனைகளை ஏற்படும். நாம் பேசும் வார்த்தைகளிலும் மிகுந்த ஆற்றல் உள்ளது. நாம் பேசும் வார்த்தை விளையாட்டு உள்ளதா அது என்ன என்பது நம் பதிவில் கூறி உள்ளோம். நாம் பேசும் நேர்மறை வார்த்தைகளின் சக்தி (The power of speaking positive word)
எப்பொழுதும் நன்றி மற்றும் அன்பு உணர்வு கொள்ளுங்கள் மற்றும் தியானம் செய்யுங்கள் உங்களால் மாற்றங்களை நன்கு அறிவீர்கள் மற்றும் நாம் நினைப்பது தான் எப்போதும் நடக்கும் ஆதலால் நேர்மறை சிந்தனைகள் நினைப்பதே மிகுந்த நல்லது மற்றம் நன்மைகளைக் கொண்டு வரும்.
இன்றைய திருக்குறள்
திருக்குறள்...
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
- குறள் 314
ஒருவர் நமக்கு எவ்வித தீய செயல்களைச் செய்து இருந்தாலும் அதை அனைத்தையும் மறந்து நாம் நன்மை செய்ய வேண்டும். மாதத்திற்கு ஒரு முறையாவது நாம் தேவையற்ற எதிர்மறைச் சிந்தனைகளைச் சிறிது சிறிதாக மறந்துவிட வேண்டும் எப்பொழுதும் நேர்மறை சிந்தனைகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.
(மேலும் புத்தம் புதிய சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள் subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்துகொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).
மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏
காட்சிப்படுத்தும் மூளை(Dreams)...
அடுத்த பகுதியில் பார்க்கலாம் 👆....
0 கருத்துகள்