இந்த இணையத்தில் தருவது உங்கள்
நேரமல்ல
சிந்தனையின் முக்கியத்துவம்
குண்டலினி தியானம்
(kundalini meditation)
குண்டலினி பற்றிய அறிந்துகொள்வோம் தெளிவாக இப்பதிவில்.
குண்டலினி தியானம் பற்றி எப்பொழுதும் ஆன்மீகத்தில் அதாவது தியானம் யோகா போன்றவற்றில் அடிக்கடி கூறுவார்கள் நமக்கு அனைவருக்கும் தெரியும்.
குண்டலினி என்ன என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
குண்டலினி என்பது நம் மூலாதாரச் சக்கரத்தின் அமைந்துள்ள ஒரு அற்புத சக்தி அதாவது பாம்புத் தோற்றம் கொண்ட வடிவம் என்று கூறுவார்கள். அந்தப் பாம்புச் சக்தி மூலாதாரத்தில் சுருண்டு படுத்து இருக்கும். அக்குண்டலினி சக்தியை நம் மூலாதார சக்கரத்திலிருந்து மூன்றாவது கண் என்று கூறப்படும் புருவச் சக்கரம்வரை கொண்டு வர வேண்டும்.
அந்தக் குண்டலினி சக்தி இவ்வாறு கொண்டு வருவது என்றால் தியானம் மூலமாகவும் அல்லது மூச்சு பயிற்சியின் மூலமாகக் கொண்டு வர முடியும். தியான பயிற்சியின் மூலம் குண்டலினி சக்தியை இவ்வாறு கொண்டு வருவது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
தியான பயிற்சியின் மூலம் குண்டலினி சக்தியை எழுப்புதல்
முதலில் தியானப்பயிற்சி என்ன என்பது தெளிவாக நம் இணையத்தில் ஒரு பதிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.சுருக்கமாகத் தியானம் என்ன என்பதை இப்பொழுது நாம் இங்குக் கூறுகிறோம் தியானம் என்பது ஒரு பயிற்சி இறைவனை நினைத்து நாம் மனதை ஒருநிலைப்படுத்துவது தான் தியானம். தியான பயிற்சியைப் பற்றி முழுமையாக ஒரு பதிவில் ஏற்கனவே பதிவிட்டு உள்ளோம்.
தியானம்(meditation) பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
தியானம் பயிற்சி செய்தால் முழுமையான சக்தி நம் உடலுக்குச் செல்லாது. முதலில் நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களைத் திறக்க வேண்டும்.சர்க்கார் வைத்திருப்பது என்றால் தியானப் பயிற்சியோ அல்லது ரிக்கி பயிற்சியில் சிறந்து விளங்குபவர்கள் மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களை மந்திரச் சொற்களால் திறந்து விடுவார்கள். இந்த ஏழு சக்கரங்களைத் திறந்து பிறகு நாம் நாள்தோறும் அதிகாலையில் எழுந்து தியான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும், அப்போதுதான் எண்ணமெல்லாம் பிரபஞ்ச ஆற்றல் நம் உடல் முழுவதுக்கும் கிடைக்கும்.பிரபஞ்ச ஆற்றல் என்னவென்று மற்றும் அது எவ்வாறு நம் உடலுக்குக் கிடைக்கும் என்பதை தெளிவாக நம் பதிவில் பதிவிட்டு உள்ளோம்.
சரி குண்டலினி சக்தியை எவ்வாறு எழுப்புவது என்று இப்பொழுது தெரிந்துகொள்ளலாம். குண்டலினி சக்தியை எழுப்புவதற்கு நாம் தியானப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நம் மூச்சை ஒரு நிலைப்படுத்தி ஒவ்வொரு சக்கரங்களிலும் மூச்சை ஒரு நிலை படுத்திக் கொண்டே வர வேண்டும்.
அவ்வாறு மூச்சை ஒரு நிலை படித்துக்கொண்டே வந்திருந்தால் மூலாதாரச் சக்கரத்தில் அமைதியாக இருக்கும் அந்தக் குண்டலினி சக்திக்கு மூச்சு காற்று மூலமாக ஒருவித சக்தி கிடைக்கும் அந்த மூச்சுக்காற்றில் சக்தி மூலாதார சக்தியின் மீது பட்டு அந்தக் குண்டலினி சக்தி சகஸ்ரார சக்கரம்வரை மேலே எழும்பத் தொடங்கும்.அவ்வாறு குண்டலினி சக்தியை எழுப்பும்போது நம் உடல் நேராக இருந்து தியானம் செய்திருக்க வேண்டும். குண்டலினி சக்தி ஒரு பாம்புத் தோற்றம்போல் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளோம்.பாம்பு எவ்வாறு வளைந்து நெளிந்து செல்கிறதோ அதே போல்தான் குண்டலினி சக்தி நம் உடல் முழுவதும் வளைந்து நெளிந்து நெற்றிச் சக்கரம் வந்து முழு சக்தியுடன் நிற்கும். அவ்வாரு குண்டலினி சக்தி நம் புருவச் சக்கரத்தில் வந்து நிற்கும்பொழுது நம் உடலுக்கு ஒருவிதப் புத்துணர்ச்சி மற்றும் அதிகமான உடல் சுறுசுறுப்பு மற்றும் சக்தி கிடைக்கும்.
அவ்வாறு குண்டலினி தியானப் பயிற்சியை நாள்தோறும் செய்து வந்தால் நாம் மூன்று காலத்தையும் உணரும் சக்தி கிடைக்கும் மற்றும் நாம் யாரென்றும் எதற்கு இவ்வுலகில் பிறந்திருக்கிறோம் என்று முழுமையாகத் தெரிந்து கொள்வோம்.அவ்வாறு குண்டலினி சக்தியும் முழுமையாக நமக்குக் கிடைத்து விட்டால் நாம் இருந்த இடத்திலிருந்து என நடக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
நாம் மேலே அக்குண்டலினி சக்தியைக் கொண்டு வரவேண்டுமென்றால் மூச்சு காற்று ஒவ்வொரு சக்கரமாக நிறுத்திக் கொண்டு வரவேண்டுமென்று.அவ்வாறு மூச்சுப்பயிற்சி அதாவது தியான பயிற்சி செய்யும்பொழுது முதலில் பிரிக்கலாம் அதாவது சகஸ்ரார சக்கரத்திலிருந்து மூலாதார சக்கரம்வரை பிரபஞ்ச ஆற்றலை நமக்குக் கிடைக்கும் படி பயிற்சி செய்ய வேண்டும் பிறகு அந்தப் பயிற்சியைச் செய்து முடித்தபிறகு பிரபஞ்ச ஆற்றல் மூலாதாரச் சக்கரத்தின் மூலமாக அந்தக் குண்டலினி சக்தியை எழுப்ப மூலாதாரச் சக்கரம் வழியாக அந்தப் பிரபஞ்ச ஆற்றல் செல்கிறது என்று எண்ண ஓட்டத்தை நிறுத்தித் தியான பயிற்சி மேற்கொண்டு கொள்ள வேண்டும். அவ்வாறு நினைத்துத் தியான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
வழு குண்டலினி சக்தியை நெற்றிக்கண் சக்கரம் அவரை எழுப்பி விட்டுப் பிறகு ஆயிரம் இதழ் தாமரை வடிவம் கொண்ட சகஸ்ரார சக்கரம் முழுமையாகப் பிரபஞ்ச ஆற்றலை நமக்குள் கொண்டு வரும் அவ்வாறு கொண்டு வரும்பொழுது நம் உடலின் ஆரா மற்றும் எண்ணங்கள் அனைத்தும் தூய்மையாகும்.
மனிதனின் ஆரா என்னவென்று நம் பதிவில் குறிப்பிட்டுள்ளோம் மற்றும் 7 சக்கரங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளோம்.
ஏழு சக்கரங்கள்(7 chakaras) பற்றி முழுமையாகக் கொள்ளுங்கள்.
மற்றும் அந்தப் பிரபஞ்ச சக்தியை நாம் சகஸ்ரார சக்கரம் முதல் மூலாதார சக்கரம்வரை கொண்டுவந்தால் ரிக்கி தியானம் என்றும் மூலாதாரச் சக்கரத்திலிருந்து சகஸ்ரார சக்கரத்திற்கு கொண்டு சென்றால் குண்டலினி சக்தி என்றும் அழைப்பார்கள். தியான பயிற்சி மற்றும் குண்டலினி பயிற்சி செய்வதற்கு நல்ல ஒரு குரு இல்லாமல் செய்ய முடியாது. மற்றும் அந்த ஏழு சக்கரங்களைப் பிறந்த பிறகுதான் பிரபஞ்ச சக்தி முழுமையாக நமக்குக் கிடைக்கும் மற்றும் அந்த ஏழு சக்கரங்கள் திறப்பதற்கு சிறந்த குருக்கள் இருக்கிறார்கள் அவர்களுடைய உதவியுடன் நீங்கள் தியான பயிற்சியை மேற்கொண்டு நல்ல பலன்கள் கிடைக்கும்.
திருக்குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
- 1 குறள்.
இறைவனை முதன்மையானவர் இவ்வுலகில் ஆதலால் நாம் எந்தச் செயல்களும் செய்வதற்கு முன்பு நாம் நமக்குப் பிடித்த இறைவனை வேண்டி மற்றும் நினைத்துச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் செய்யும் செயலுக்கான முழு பலனையும் மற்றும் அச்செயலை செய்வதற்கு முழு சக்தியையும் கிடைக்கும்.
கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.
(மேலும் புத்தம் புதிய சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள் subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்து கொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).
மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளை(srimad pamban gurudasa swamigal) பற்றித் தெரிந்துகொள்ளலாம்....
அடுத்த பதிவில் பார்ப்போம்👆....
0 கருத்துகள்