ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்(pamban Gurudasa swamigal)




இந்த இணையத்தில் தருவது உங்கள்

 நேரமல்ல

 சிந்தனையின் முக்கியத்துவம்


ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்.(Pamban gurudasa swamigal)




ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்






இப்பதிவில் பாம்பன் சுவாமிகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்...


ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். ஆனால் யார் இவர் இவரது இயற்பெயர் என்னவென்று நாம் காணலாம்.
பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் இயற்பெயர் அப்பாவு ஆகும். இவர் பிறந்த ஆண்டு இதுவரை சரியாகத் தெரியவில்லை, 1848-1850 இந்த வருட நாட்களில் பிறந்தவர். இவர் இராமேஸ்வரத்தில் பிறந்தவர். இவரை அனைவரும் பாம்பன் சுவாமிகள் என அழைப்பார்கள்.  இராமேஸ்வரத்தில் இருக்கும் பாம்பன் என்னும் கிராமத்தில் பிறந்தார்ஆகையால் பாம்பன் என்னும் ஊரில் பிறந்ததால் பாம்பன் சுவாமிகள் என அழைக்கப்பட்டார் இவர் ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த துறவி ஆவார்.



நாம் அனைவருக்கும் ஒவ்வொரு இறைவனை பிடிக்கும் அதாவது ஒவ்வொரு கடவுள், பிடித்த கடவுள் என அனைவருக்கும் தனித்தனியாக இருக்கும் அவ்வாறு பாம்பன் சுவாமிகளுக்குத் தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகப்பெருமானை அவருக்குப் பிடித்த மற்றும் வணங்கி வந்திருந்தார். இவர் சிறு வயதிலேயே தமிழ் மீது அதிக பற்று கொண்டிருந்தார் மற்றும் ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் பாடல்களை விரும்பிப் படிப்பார் மற்றும் கந்த சஷ்டி பாடல்கள் கருத்தில் கொண்டு இவர் கந்த குரு கவசம் பாடலை இயற்றினார். இவர் அருணகிரிநாதரை போல் முருகனைப் பற்றிச் சிறப்பு பக்தி பாடங்களை எழுதினார். ஸ்ரீ கந்த சஷ்டி கவச பாடல்கள் 244 வரிகளைக் கொண்டுள்ளது அதை மூல நூலாகக் கொண்டு இயற்றிய ஸ்ரீ கந்த குரு கவசம் பாடலின் வரிகள் குறைவாக  இருந்தாலும் ஸ்ரீ கந்த சஷ்டி கவசத்தை படித்தால் எவ்வளவு அருள் கிடைக்குமோ அதே அளவு ஸ்ரீ கந்த குரு கவசம் பாடல்கள் படித்தால் கிடைக்கும். ஸ்ரீ கந்த குரு கவசம் பாடல் மட்டுமல்லாது 6666 பாடல்களை எழுதியுள்ளார். அந்தப் பாடல்கள் ஆறு தலைப்பில் பிரிக்கப்பட்டுள்ளது. நாம் அனைவருக்கும் தெரிந்த பாடல்கள் ஸ்ரீ கந்த குரு கவசம், பஞ்சாமிர்த வண்ணம் மற்றும் குமாரஸ்தவம் ஆகும்.

பஞ்சாமிர்த வண்ணம் பாடலைப் படித்தால் முருகனே நேரடியாக வந்து அருள்புரியும் அளவிற்கு சக்திமிக்க பாடலாகும். பஞ்சாமிர்தம் வண்ணம் பாடலில் முருகனுக்கு பஞ்சவித அபிஷேகப் பொருட்களால் முருகனுக்கு அபிஷேகம் செய்வதை அந்தப் பாடலில் எழுதியுள்ளார், மற்றும் இவர் படிப்பு முடித்த காலங்கள் பிறகு இவருக்கு முருகனின் உபதேசம் கிடைத்தது அதன்பிறகு இவர் முழுமையாக முருகனை நினைத்து வாழ்ந்தார். இவர் அனைத்து ஊரில் உள்ள கோவிலுக்கும் சென்று முருகனை கண்டு மகிழ்ந்தார் ஆனால் இவரால் கடைசி வரை "பழனி மலை முருகனை பார்க்க முடியவில்லை" ஏனென்று பின்பு கூறுகிறேன். இவர் 1929 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி சென்னையில் உள்ள திருவான்மியூர் என்ற பகுதியில்  ஜீவசமாதி அடைந்தார். திருவான்மியூர் அமைந்துள்ள பாம்பன் சுவாமி கோயிலில் உள்ள புகைப்படத்தை இங்கு இனைத்துள்ளோம்.




ரிக்கி மாஸ்டர் மிக்கோ உசுயி(Mikao usui) வாழ்க்கை கதை அறிந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச அவர்களைப் பற்றிக் கதைகள் அறிவோம்...


பாம்பன் சுவாமிகள் 21 நாட்கள் கடும் தவம் முருகன் மீது மேற்கொண்டார். கடும் தவம் என்றால் எப்படி? தொடர்ந்து  அவர் 21 நாட்கள் மயான பூமி அதாவது சுடுகாட்டில் அமர்ந்து தவம் மேற்கொண்டார். அவர் அவரது குடும்பத்தினரிடம்  தவம் செய்யச் செல்லும்போது தினமும் ஒரு கிண்ணத்தில் வெண்பொங்கல் உப்பு இல்லாமல் வைத்து விடுங்கள் என்றார். மறுநாள் அந்தப் பாத்திரத்தைப் பார்க்கும்பொழுது சாப்பிடாமல் இருந்தால் என் உடலை எடுத்து இறந்துவிட்டேன் என்று  புதைத்து விடுங்கள் என்று கூறியுள்ளார். தினமும் ஒரு வேளை மட்டும் தான் அவருக்கு அந்த 21 நாட்களில் வெண்பொங்கல் உப்பு இல்லாமல் கொடுத்து வந்துள்ளார்கள். 21 நாட்கள் கழித்து அவருக்கு முருகனின் அருள் கிடைத்தது.



பாம்பன் சுவாமிகள் ஒருமறை முழங்கால் முறிவு ஏற்பட்டது உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போ இருந்த ஆங்கிலேய மருத்துவர்கள் உங்களது காலில் உள்ள எலும்பு உடைந்து உள்ளது எலும்பு மீண்டும் கூடுவது கடினமாகும் மற்றும் நீங்கள் நடப்பது கடினமே என்று கூறிவிட்டார்கள். இவர் முழு நம்பிக்கையுடன் அவர் இயற்றிய ஸ்ரீ கந்த குரு கவசத்தை தினமும் படித்து வந்தார் ஒருநாள் அவரது கனவில் வேல் உடைந்த முழங்கால் பகுதியில் வந்து மறைந்தது போல் தோன்றியது.அதன் பிறகு மருத்துவர்கள் மீண்டும் வந்து பரிசோதனை செய்யும்பொழுது அவரது கால் குணமடைந்து இருந்ததை அதிசயமாகக் கண்டனர். அதன்பிறகு பாம்பன் சுவாமிகளின் புகைப்படத்தை அந்த அரசு மருத்துவமனையில் வைத்து வழிபட்டார்கள். திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகளின் கோவிலில் அந்த மருத்துவமனையில் நிகழ்ந்த அற்புதத்தை வண்ண ஓவிய புகைப்படமாக வைத்துள்ளார்கள். மேலே கூறியுள்ளோம் அல்லவா பாம்பன் சுவாமிகள் அனைத்தும் ஊரில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்றுள்ளார் ஆனால் பழனி மலைக்கு மட்டும் செல்ல வில்லை ஏனென்றால் பாம்பன் சுவாமிகளிடம் யாரோ ஒருவர் ஏன் இவ்வாறு துறவியாக மாறி விட்டாய்? யார் இவ்வாறு வரச் சொன்னது? என்று கேட்டார். அப்பொழுது பாம்பன் சுவாமிகள் ஒரு சிறிய பொய்யைக் கூறியுள்ளார் முருகன் தான் என்னை இவ்வாறு வரச்சொன்னார் என்று கூறினார், அப்பொழுது முருகர் பாம்பன் சுவாமிகள் கனவில் தோன்றி கோபம் கொண்டார் நானா வரச் சொன்னேன் என்றார், அதன் பிறகு நீ இவ்வாறு பொய் கூறியதால் நான் சொல்லும் வரை பழனி மலைக்கு வரக் கூடாது என்று கட்டளையிட்டார். அதன்படி பாம்பன் சுவாமிகளும் பழனி மலைக்குச் செல்லவில்லை முருகனும் இறுதிவரை பழனி மலைக்கு வா என்று பாம்பன் சுவாமிகள் அழைக்க வில்லை.அதனால் பாம்பன் சுவாமிகள் தன் கடைசி காலம்வரை பழனி மலைக்குச் செல்ல முடியாமல் போய்விட்டது.......
எப்பொழுது பொய்களைக் கூறுவது தவிர்த்துக் கொள்ளுங்கள்....

 திருக்குறள்


பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு எனின்


- குறள் 292


விளையாட்டிற்காகக் கூறிய பொய் பாம்பன் சுவாமிகள் கடைசிவரை பழனி மலைக்குப் போக முடியாத அளவிற்கு ஆகிவிட்டது. ஆதலால் பொய் கூறினாலும் நன்மை செயலுக்கு மட்டுமே கூற வேண்டும் தேவையற்ற பொய்களைக் கூறுவதே தவறு மற்றும் தேவையற்ற பொய்களைக் கூறுவது தவிர்த்துக் கொள்வதும் நல்லது. 

கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.

(மேலும் புத்தம் புதிய  சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள்  subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்து கொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).





மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏



நம் பேசும் நேர்மறை வார்த்தைகளின் சக்தி(The power of speaking positive words)...


அடுத்த பதிவில் பார்ப்போம்👆....


கருத்துரையிடுக

0 கருத்துகள்