நாம் பேசும் நேர்மறை வார்த்தைகளின் சக்தி(The Power of speaking positive words)






இந்த இணையத்தில் தருவது உங்கள்

 நேரமல்ல

 சிந்தனையின் முக்கியத்துவம்




பேசும் வார்த்தைகளின் சக்தி

(The power of speaking words)



Speaking words







பேசுகிற வார்த்தைகள் என்ன பெரிதாக இருந்து விடும் என்று நம்மில்  பலர் சிந்திப்போம்.
முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் சக்தி உள்ளது, அப்படி? என்ன சக்தி? என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம். நாம் எப்பொழுதும் பேசும்பொழுது நேர்மறை சொற்களில் பேசினால் பிரபஞ்ச ஆற்றல் நமக்குத் தெளிவாகக் கிடைக்கும் மற்றும் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பிரபஞ்ச ஆற்றலைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்...



நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளிலும் சக்தி உள்ளது எவ்வாறு பேசுகிறோம் என்பதில் தான்  நாம் நல்ல சக்திகளைப் பெறுகிறோமா  அல்லது தேவையற்ற சக்திகளைப் பெறுகிறாமா என்று இருக்கிறது.

பேசுவது சக்தியா?

ஆம் நாம் பேசும் ஒவ்வொறு வார்த்தைகளிலும் சக்தி உள்ளது. நாம் எப்பொழுதும் நேர்மறை சொற்களைப் பேசும்பொழுது நமக்கு நன்மைகள் நடைபெறும். எதிர்மறைச் சொற்கள் பேசும்போது தீமைகளை மற்றும் தீமையாக முடியும். நாம் வாரத்தில் ஒரு முறையாவது நான்கு மணி நேரமாவது  அல்லது ஒரு மணி நேரமாவது அமைதியாக இருக்க வேண்டும் அவ்வாறு அமைதியாக இருந்த பின்  பேசும் வார்த்தைகளுக்குச் சக்தி அதிகம். ஒரு உண்மையைக் காணலாம், ஒரு வெளிநாட்டில் இருக்கும் விஞ்ஞானி இரண்டு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றி வைத்திருந்தார். அவர் தினமும் அந்தத் தண்ணீர் அருகே  சென்று ஒரு டம்பளர் எடுத்து நல்ல வார்த்தைகளை அதாவது நேர்மறை வார்த்தைகள் தினமும் கூறிக் கொண்டே இருந்தார். மற்றொரு கண்ணாடி டம்பளர் இருக்கும் தண்ணீர் அருகே சென்று எதிர்மறை சொற்களைத் தினமும் சொல்லிக்கொண்டே வந்திருந்தார். சில நாட்கள் கழித்து அந்த விஞ்ஞானி கவனித்துள்ளார். நேர்மறை சொற்கள் கூறி கொண்டு வந்திருந்த டம்ளரில் சுத்தமாகவும் மற்றும் நுண்ணோக்கி மூலமாக அந்தத் தண்ணீரை பார்த்தார் அப்போது அந்தத் தண்ணீர் கண்ணாடிபோல் பிரதிபலித்தது மற்றும் ஒரு வித்தியாசமான தோற்றம் அந்தத் தண்ணீரில் தெரிந்தது. அதேபோல் எதிர்மறையாகப் பேசிக் கொண்டு வந்திருந்த தண்ணீரை எடுத்துப் பார்த்திருக்கிறார் அப்போது அந்தத் தண்ணீர் துர்நாற்றமும் மற்றும் கருமை வண்ணத்தில் மாறி இருந்தது. அந்தத் தண்ணீரை நுண்ணோக்கியில் பார்க்கும்பொழுது ஒரு கொடூரமான தோற்றம் தெரிந்துள்ளது. சிறிது நாள் கழித்து அந்த இரண்டு டம்ளர்களிடம் நேர்மறைச் சொற்களைக் கூறி வந்துள்ளார், சிறிது நாட்கள் கழித்து அந்தத் துர்நாற்றம் மறைந்து மற்றும் கருமை நிறமாக மாறி இருந்த தண்ணீர் தூய்மையாகத் தெரிந்துள்ளது. ஆனால் நாம் பேசுகின்ற வார்த்தைகளில் ஒரு விதச் சக்தி உள்ளது ஆதலால் யாரையும் பழித்துப் பேசி விடக் கூடாது, நேர்மறையாகப் பேசுவது நல்லது.


 அதே விஞ்ஞானி ஒரு துர்நாற்றம் வந்திருந்த தண்ணீரிடம் ஒரு சிறு குழந்தையை வைத்து நன்றி நன்றி  தினமும் கூற சொல்லிருந்தார். அந்தக் குழந்தை தினமும் நன்றி என்ற வார்த்தையைக் கூறியதால் அந்தத் துர்நாற்றமடைந்த தண்ணீர் தெளிவாக மற்றும் தூய்மையாக மாறியிருந்தது. அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது நன்றி என்ற வார்த்தைக்கு மிகச் சக்தி உள்ளது என்று தெரிந்து கொண்டார்.
ஆதலால் எப்பொழுதும் நாம் பேசுகின்ற வார்த்தை நேர்மறையாக இருக்க வேண்டும் மற்றும் குழந்தைகளிடம் எப்போதும் நேர்மறை சொற்களைப் பேசுங்கள், ஏனென்றால் குழந்தைகளிடம் எதிர்மறை சொற்களைப் பேசினால் அவர்களது மனம் வருத்தப்படும் மற்றும் அவ்வாறு பேசும் எதிர்மறைச் சொற்கள் அவரது வாழ்க்கையை மாற்றி விடும்.

 உதாரணமாக எப்பொழுதும் எதிர்மறை சொற்களைப் பேசிக் கொண்டிருந்தால் அதாவது ஒரு வெற்றிக்கான பயணத்தில் தோற்றுவிடுவோம், நம்மால் முடியாது அவ்வாறெல்லாம் பேசிக் கொண்டிருந்தால் அந்தச் செயல் எதிர்மறையாகவே முடியும்.
குழந்தைகளைப் பேசவைத்து ரசியுங்கள் ஏனென்றால் குழந்தைகள் நேர்மறைச் சொற்களைப் பேசும். எப்பொழுதும் நல்ல எண்ணத்தை நினைத்துப் பேசுங்கள் நாம் பேசுவோம் அவர்களும் மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும். நாம் ஒரு வார்த்தையை மீண்டும் மீண்டும் கூறி கொண்டே இருந்தால் நாம் என்ன கூறுகிறோம் அதே நடந்துவிடும், ஆதலால் நேர்மறை சொற்களைக் கூறினால் நல்லது நடக்கும். உதாரணமாக ஒரு கடவுளின் பெயரைக் கூறிக் கொண்டிருந்தால் அது நன்மையில் நடந்து முடியும். ஒருவனைப் பார்த்து எதிர்மறை சொற்களைப் பயன்படுத்திக்கொண்டே இருந்தால் அவனது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும் மற்றும் தீமையில்  முடியும். அவ்வாறு ஒரு மனிதனை எதிர்மறை சொற்களைக் கொண்டு பேசினாலோ அல்லது திட்டினாலோ நமக்குக் கர்மவினை அதிகரிக்கும்மற்றும் அவ்வாறு ஏதேனும் தீமைகள் நடந்து விட்டால் நம் மனம் புண்படும் வாழ்நாள் முழுவதும், அவ்வாறு புண்படாமல் நேர்மறை   சொற்களைப் பேசுங்கள்.அவை எந்த மொழியாக இருந்தாலும் சரி நேர்மறையாகப் பேசுங்கள்.

நாம் இணையத்தில் கடந்த இரண்டு பதிவுகளிலிருந்து திருக்குறள் ஒன்றை சேற்று  வருகிறோம்.

 அதனால் நாம் இனி வரும் பதிவுகளை ஒரு திருக்குறளை தெரிந்துகொள்வோம்.


இன்றைய திருக்குறள்...



தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
 நாவினால் சுட்ட வடு
- குறள் 129


ஒருவரை வார்த்தைகளால் திட்டுவதால் அவர் மனம் புண்படும் மற்றும் அந்த வார்த்தைகள் அவரால் மறக்க இயலாது, அவ்வாறு எதிர்மறைச் சொற்கள் கொண்டு அவரைத் திட்டினால் அது தீயினால் சுட்டப்புண்ணைவிட வலி அதிகம் எவ்வாறென்றால் ஒருவருக்கு  தீயினால் சுட்ட புண்கள் கூட ஆறிவிடும் ஆனால்  வார்த்தைகளால்  திட்டியிருந்தால்  அவரது மனம் புண்பட்ட ஆறவே ஆறாது. அவ்வாறு ஒரு மனதை புண்படுத்தித் தான் வாழ்வ வேண்டும் என்பது மிகத் தவறு, மற்றும் எப்பொழுதும் நேர்மறைச் சொற்களைக் கூறுவதே சிறந்தது மற்றும் புன்னகை, மகிழ்ச்சி அனைத்தும் கிடைக்கும்.

கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.

(மேலும் புத்தம் புதிய  சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள்  subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்து கொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).





மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏



அமைதியின் சக்தி(The power of silent)


அடுத்த பதிவில் பார்ப்போம்....

கருத்துரையிடுக

0 கருத்துகள்