அமைதியின் சக்தி (The power of Silence)






இந்த இணையத்தில் தருவது உங்கள்

 நேரமல்ல

 சிந்தனையின் முக்கியத்துவம்




அமைதியின் சக்தி

(The power of silence)


அமைதியின் ஆற்றல்




அமைதி(பொருமை)

அமைதியின் ஆற்றல் அதாவது அமைதியின் சக்தியைப் பற்றி நாம் இப்பகுதியில் தெளிவாகப் பார்க்கப் போகிறோம். அமைதியை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் ஆழ் மன அமைதி மற்றும் பேசாமல் அமைதியாக இருப்பது அதாவது மௌனமாக இருப்பது.அமைதியாக அனைத்து இடத்திலும் இருந்துவிட முடியாது அதாவது பொறுமையாக அனைத்து இடத்திலும் இருக்க முடியாது  மற்றும் அமைதியாக இருந்தால் ஒரு மனிதன் மிகுந்த சக்தி அடைவான்.



ஒரு மனிதன் அமைதியாக இருந்தால் அவனால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் மற்றும் அமைதியாக இருத்தல் மூலம் நம்மை நோக்கித் தாக்கும் தீய செயல்கள் அனைத்தும் நம்மை வந்து சேராது அவர்களுக்கே சென்றுவிடும். மனிதன் அமைதியாக இருப்பது இரண்டு வகை என்று கூறியுள்ளோம். 

மன அமைதி
மன அமைதியாக இருப்பது என்றால் நாம் சிந்தனைகளின் ஓட்டத்தை ஒருநலைப்படுத்தி மற்றும் எந்தச் சிந்தனைகளும் மேற்கொள்ளாதவண்ணம் மனதை கட்டுக்குள் கொண்டுவருவது தான் மன அமைதி. மனதை அனைவராலும் ஒருநிலைப்படுத்த முடியும் மற்றும் அனைவராலும்  சுலபமாக மனதை அமைதிப்படுத்த முடியாது ஏனென்றால் அனைவருக்கும் வெவ்வேறு சிந்தனைகள் இருக்கிறது. அந்தச் சிந்தனைகளை அமைதிப்படுத்தி மற்றும் சிந்தனைகள் வராதவண்ணம் ஒரு பொருட்கள்மீது நான் அனைத்தையும் எண்ணங்களையும் மேற்கொள்ள வேண்டும் அல்லது தியான பயிற்சியின் மூலம் மனதை கட்டுப்படுத்த முடியும். தியானப் பயிற்சி சுலபமான ஒன்று ஆனால் அனைவராலும்  தியான பயிற்சி மிக விரைவில் கற்றுக்கொள்ள முடியாது மற்றும் தியான பயிற்சிமூலம் மனதை அமைதி படுத்த முடியும். தியானம் செய்யும்பொழுது தான் தேவையற்ற எண்ணங்கள் அதிகமாகத் தோன்றும், நாம் அதை எல்லாம் கடந்து தான் மனதை ஒரு நிலைப்படுத்தி அங்கும் இறைவனை அதாவது நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றின் மீது கவனித்து  மனதை அமைதிப்படுத்துகிறது. மற்றொன்று ஒரு பொருட்கள்மீது கவனம் கொண்டு அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றால். சுலபமான ஒரு வழி  ஒரு இருட்டு அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து அமர்ந்துகொண்டு அதைக் கவனித்தால்   பார்வையும் எண்ணமும் அந்தச் சிறு வெளிச்சத்தின் மீதுதான் இருக்கும். அப்பொழுது மனம் அமைதி பெறும், நம் மனம் அமைதி பெற்றால் பிரபஞ்ச ஆற்றல் தெளிவாக மட்டுமே முழுமையாக நம் உடலுக்குக் கிடைக்கும். பிரபஞ்சத்தைப் பற்றி நாம் இணையத்தில் சுலபமாகவும் மற்றும் தெளிவாகவும் கூறியுள்ளோம். அமைதி மேற்கொண்டால் அதாவது மன அமைதி சுலபமாக அனைவராலும் மேற்கொள்ள முடியும் ஆனால் அதற்குப் பயிற்சி தேவை.

 மௌனம் அதாவது வெளிப்புற அமைதி.

வெளிப்புற அமைதி


வெளிப்புற அமைதி என்றால் நாம் பேசாமல் இருப்பதுதான் வெளிப்புற அமைதியாகும். நாம் பேசுகின்ற வார்த்தை எல்லாம் சக்தி மிகுந்த  உள்ளது.நாம் பேசுகின்ற வார்த்தைகளையும் சக்தி எவ்வாறு உள்ளது என்று நாம் பகுதியில் கூறப்பட்டுள்ளது.  ஒருவர் அமைதியாக இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். அனைவருக்கும் மகாத்மா காந்தியை பற்றி நன்றாகத் தெரியும் அவர் கையாண்ட ஆயுதம் அமைதி அதாவது அகிம்சை. அவர் கடைசியாக அமைதியை கொண்டு நம் நாட்டிற்கு சுகந்திரம் வாங்கி கொடுத்துள்ளார். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது அமைதியாகவே இருந்தாள் எதை வேண்டுமானாலும் வெல்ல முடியும் என்று மற்றும் மன அமைதிக்கு பின் பேசும் வார்த்தைகள் அனைத்தும் மிகுந்த சக்தி கொண்டது. அமைதியை பற்றி அதாவது பொறுமையைப் பற்றித் திருவள்ளுவர் அப்போதே எழுதியுள்ளார்.

இன்றைய திருக்குறளை பார்ப்போம்

திருக்குறள்




காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்
- குறள் 485

ஒருவர் அமைதியாகக் காலம் கருத்து இருந்தால் அவரால் எதைவேண்டுமானாலும் வெல்லக்கூடிய சக்தி கிடைக்கும். அதைதான் திருவள்ளுவர் அப்பொழுதே கூறியுள்ளார் ஒருவர் காலம் கருதி இருந்தால் அவரால் உலகத்தையே ஆளும் சக்தி கிடைக்கும் என்றார்.

ஆனால் இந்தப் பதிவில் அமைதி பற்றிக் கூறும்பொழுது அமைதியாக அதாவது பொறுமையாக அனைத்து இடத்திலும் இருந்து விட முடியுமா? என்று கேட்டோம்.

அதாவது பொறுமையாக அனைத்து இடத்திலும் இருக்க முடியாது ஏனென்றால் நாம் வாழும் சமுதாய சூழ்நிலையில் அமைதியாக அதாவது பொறுமையாக அனைத்து இடத்திலும் இருந்துவிட முடியாது.  

உதாரணமாக ஒரு பழமொழி யுடன் தெளிவுபடுத்துகிறோம்.

பழமொழி:



பொறுமை கடலினும் பெரிது...

இந்தப் பழமொழியை நாம் அனைவரும் அறிவோம் அந்தப் பழமொழியின் அர்த்தம் என்னவென்றால் ஒருவன் பொறுமையாக அமைதியைக் கடைப்படித்து இருந்தால் அது கடலைவிடப் பெரியது என்பார்கள். ஏன் கடலை இதில் கூறினார்கள் என்றால் நாம் வாழும் உலகில் நான்கு பாகத்தில் மூன்று பாகங்கள் கடல் சூழ்ந்துள்ளது. அதாவது இவ்வுலகத்தில் கடல் தான் மிக அதிகமாக உள்ளது ஆதலால் தான் அந்தப் பழமொழியில் பொறுமையாக இருந்தால் கடலைவிடப் பெரிது என்று கூறினார்கள்.
ஆனால் அந்தப் பழமொழி அனைத்து இடத்திலும் கூறிவிட முடியாது அதாவது அனைத்து இடத்திலும் நம்மால் பொறுமையாக இருக்க முடியாது.
நாம் ஏன் அவ்வாறு அமைதியாக அதாவது பொறுமையாக இருக்க முடியாது என்றால் உதாரணமாக

 ஒரு கற்பனை மேற்கொள்ளுங்கள் 
உங்களது வீடு தீப்பற்றி எரிகிறது.





அப்போது நீங்கள் பொறுமை கடலினும் பெரிது என்று கூறிக் கொண்டிருந்தால் வீடுபற்றி எறிந்து விடும்.  ஆதலால் அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும்.


இப்பகுதியை ஒரு சிறு கதையுடன் முடித்துக் கொள்கிறேன்.



நாம் ஏன் அமைதி மிகச் சக்தியானது  என்று கூறுகிறோம் என்றால் அவருக்கும் மகாபாரதக்
 கதை தெரியும்.




 அதில் பஞ்ச பாண்டவர்களின் தாய் குந்தி பற்றித் தெரியும். பஞ்ச பாண்டவர்களின் தாய் அவர்கள் நாட்டை இழந்த பின் ஒரு வீட்டில் வேலை செய்து வந்துள்ளார்கள் அப்பொழுது அவர்கள் ஏதோ ஒரு தவறை செய்து உள்ளார்கள். அதற்கு அந்த வீட்டில் உள்ள முதலாளி அவர்கள் குந்தி அவர்களைத் திட்டி உள்ளார்கள் அவர்கள் எதுவும் சொல்லாமல் அமைதியாக வீட்டிற்கு வந்துள்ளார்கள். அதன் பிறகு அன்று இரவே அந்த முதலாளி வீட்டில் ஒருவர் இறந்திருந்தார் அப்பொழுது பஞ்ச பாண்டவர்களில் தர்மத்திற்கு பேர்போன தர்மன் பார்த்தான் ஏன் திடீரென்று அவர் இறந்துவிட்டார் என்று அப்பொழுது தர்மன் அவரது தாயிடம் என்ன நடந்தது என்று கேட்டார். அப்பொழுது இவ்வாறு நடந்தது என்னைத் திட்டி விட்டார்கள் என்று கூறினார்கள் நானும் அமைதியாக வந்தேன் என்றாள் குந்தி. பிறகு தர்மம் என்ன ஆகிவிட்டது என்று தர்ம கணக்குப் போட்டுப் பார்த்தார். அப்பொழுது அமைதியாக வந்ததால் தான் அந்த வீட்டு ஒருவர் இறந்துவிட்டார் என்று அவர் அம்மாவிடம் தர்மன் கூறினார். பின்பு நீங்கள் போய்த் தள்ளி இருந்து அவர்களைத் திட்டி விட்டு வாருங்கள் என்று கூறினார். அதேபோல் குந்தி தாயும் தள்ளி இருந்து அவரைத் திட்டி விட்டு வந்தார் அதன்பின் இறந்தவர் திடீரென உயிர் கொண்டு எழுந்தார். இப்பொழுது தெரிகிறதா அமைதிக்கு எவ்வளவு ஆற்றல் சக்தி உள்ளது என்று. ஆதலால் யாரேனும் திட்டினார்கள் என்றாலும் நீங்கள் அமைதியாக இருந்து விடுங்கள். நீங்கள் திட்டினால் உங்களுக்குக் கர்மவினை சேரும். அவர்களது கர்மவினை அவர்களுக்கே சேரும்.




இப்பதிவில் என்ன கூறுகிறோம் என்றால் தேவையான பகுதிகளில் மன அமைதியும் மௌனமாக இருக்க வேண்டும். ஆனால் அனைத்து இடத்திலும் அமைதியாக இருந்துவிட கூடாது.



கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.

(மேலும் புத்தம் புதிய  சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள்  subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்து கொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).





மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏



தன்னம்பிக்கை(self confidence)


அடுத்த பகுதியில் பார்க்கலாம் 👆....

கருத்துரையிடுக

0 கருத்துகள்