தன்னம்பிக்கை(Self confidence)




இந்த இணையத்தில் தருவது உங்கள்

 நேரமல்ல

 சிந்தனையின் முக்கியத்துவம்



தன்னம்பிக்கை

(Self confidence)


தன்னம்பிக்கை (self confidence)





நாம் இன்றைய பதிவு சுய நம்பிக்கையைப் பற்றித் தெளிவாகப் பார்க்கப் போகிறோம் மற்றும் சுய நம்பிக்கை கொண்டால் என்ன முடியும் என்பதை சில உண்மை சம்பவங்களைக் கொண்டு  தெளிவாக இப்பதிவு பார்க்க இருக்கிறோம்.


நம்பிக்கை


உடைந்த காலுடன் ஓடிய நபர்


ஒரு மனிதனால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் அனைவரும் அவரவர்மீது நம்பிக்கை வைக்க மாட்டுகிறார்கள்.  நம்பிக்கை என்றால் ஒருவர் அவர்மீது ஒருவிதமான சக்தி இருக்கிறது என்று உணர்வார்கள். அதாவது நாம் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று அவரால் உணர முடியும் மற்றும் செய்து முடிப்போம் என்று ஒருவித குறிக்கோளுடன் இருப்பதுதான் நம்பிக்கை. ஒருவனின் மன நம்பிக்கை மிகுந்த ஆற்றல் கொண்ட ஒன்று. அவனால் எது வேணாலும் ஒரு நம்பிக்கை வைத்திருந்தால் செய்ய முடியும் ஆனால் யாரும் அவரவர்மீது நம்பிக்கை வைப்பதில்லை ஏனென்றால்  ஒருவித பயம், நம்மால் முடியாது என்று.


 ஒரு முயற்சியை நாம் செய்யும்பொழுது நம்மால் செய்ய முடியும் என்று ஒரு நம்பிக்கையுடன் இருங்கள். உங்களை நீங்கள் நம்புங்கள் முதலில் நம்மால் எந்தவித  செயலைச் செய்ய முடியும் என்று எவ்வித கஷ்டங்கள் வந்தாலும் நாம் அதை விட்டுக் கொடுக்கக் கூடாது அந்த முயற்சியைக் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று ஒரு நம்பிக்கை எப்பொழுதும் இருக்க வேண்டும், மற்றும் அதே போல் நாம் வெற்றி பெற்று விடுவோம்.


எதைக் கண்டும் நீங்கள் பயந்து விடக் கூடாது.நாம் செய்கின்ற ஒவ்வொரு முயற்சியையும் ஏதேனும் தடைகள் ஏற்படும். அதைக் கண்டு பயப்படாமல் நம் மன நம்பிக்கையுடன் செய்தால் அந்தச் செயலில் நாம் வெற்றி காணுவோம்.


மனிதனின் மன நம்பிக்கைக்கு அளவில்லா சக்தி

நாம் சில உண்மை சம்பவங்களைக் கூறப்போகிறோம் அதை நீங்கள் தெரிந்து ஒரு மனிதனின் மன தைரியம் அதாவது மன நம்பிக்கை எவ்வளவு உறுதியானது மற்றும் ஆற்றல் படைத்தது என்று தெரிந்து கொள்வீர்கள்.

கால் உடைந்து இருந்தவன் ஓடிய ஓட்டம்.

ஒரு வீடு கட்டும் தொழிலாளி, அவர் எப்பொழுதும் தனது வேலைக்கு வழக்கமாகச் செல்வார். ஒரு நாள் அவர் வீடு கட்டும் பணியில் ஈடுபடும்போது திடீரென்று தடுமாற்றம் ஏற்பட்டு முதல் மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டார். அப்போதுஅங்கிருந்து வேலை செய்யும் ஆட்கள் அனைவரும் அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். மருத்துவர்கள்அவரது கால் உடைந்துவிட்டது இன்னும் சில மாதங்களில் அவரால் நடக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். அவர் காலில் மாவுக்கட்டு போட்டுப் படுக்கையில் இருந்துள்ளார்.

Self confidence

 திடீரென ஒரு செய்தி அந்த ஊருக்கு ஒரு மிகப்பெரிய சுனாமி வருகிறது  என்று செய்திகள் வந்துள்ளது. அந்த மருத்துவமனையும் கடற்கரைக்கு அருகிலேயே உள்ளது.அந்தச் செய்தியைக் கேட்ட அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளார்கள் ஆனால் அவரால் நடக்க முடியாது என்று அவரை யாரும் பார்க்காமல் ஓடிச் சென்று விட்டார்கள். இவர் மன நம்பிக்கையுடன் அங்கிருந்து இறங்கி சில மைல் தூரம் ஓடி வந்துள்ளார். அப்பொழுது அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். மருத்துவர்கள் நடக்க முடியாது என்று கூறி அவரா? இவ்வளவு தூரம் ஓடி வந்துள்ளார் என்று ஆச்சரியம் அடைந்தார்கள். அப்போதுதான் அங்கிருந்தவர்களிடம் அவர் கூறினார் என்னால் தப்பித்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன் அதனால்தான் இவ்வளவு தூரம் வந்து உள்ளேன் என்று கூறினார்.

மற்றொறு சம்பவம் பார்க்கலாம்...

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அப்பா மகனின் அழுகை


ஒரு நகரத்தில் ஒரு அப்பா மற்றும் மகன் இருந்தனர். அந்தச் சிறு பையனை அவர்களது அப்பா எப்பொழுதும் பள்ளிக்குச் சென்று விடுவது வழக்கமாக இருந்தது. ஒரு நாள் அந்தப் பையன் அப்பாவைப் பார்த்து இன்று என்னை நீங்கள் தான் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டான் அதற்கு அந்த அப்பா கண்டிப்பாக நான் வந்து அழைத்துச் செல்கிறேன். எவ்விதச் சூழ்நிலையில் இருந்தாலும் நான் கண்டிப்பாக உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று கூறினார்.  அன்று பேசியது போல் என்றும் பேசியதே இல்லை ஆனால் அன்று ஒரு வித்தியாசமாக இருந்துள்ளது இருவருக்கும். தன் மகனைப் பள்ளியில் விட்டுவிட்டு அவர் வேலைக்குச் சென்றுள்ளார். திடீரெனப் பூகம்பம் ஏற்பட்டது அந்த நகரத்தில் அனைத்துப் பகுதிகளும் இடிந்து விடத் தொடங்கியது. அப்பொழுது வேலைக்கு வந்த அவர் நம்பிக்கையுடன் எப்படியோ தப்பித்து உள்ளார் மற்றும் அந்தக் கவலையுடன் வேகமாகப் பள்ளிக்குச் சென்றுள்ளார் பள்ளி கட்டிடம் முழுவதும் இடிந்து உள்ளது.பிள்ளைகளின் பெற்றோர்கள் அனைவரும் வந்து கதறி அழுதுகொண்டே தன் பிள்ளைகளைத் தேடி கொண்டு இருந்தார்கள். இவரும் சென்று தன் மகனைத் தேடி கொண்டு இருந்தார், அனைவரும் அவரிடம் நிறைய பிள்ளைகள் இறந்து விட்டார்கள் நீங்கள் தேடுவது வீண் தான் என்று கூறினார்கள். அவர் யார் சொல்வதையும் கேட்காமல் மன நம்பிக்கையுடன் இரண்டு நாள் தேடிய பின்னர் ஒரு இடத்தில் தன் மகனைப் பெயர் சொல்லி  அழைத்தார் அப்போது அந்தப் பையனின் 'அப்பா நான் இங்கே உள்ளேன்' என்று ஒரு சப்தம் கேட்டது அப்போதுதான் அந்த அப்பாவுக்கு ஒரே ஆனந்தம் தன்மகன் இறக்கவில்லை என்று பின்னர் அந்த மகனிடம் அவர் அப்பா சொன்னது போலவே நான் உன்னை அழைத்துச் செல்ல வந்துள்ளேன் என்று ஒரு அழுகையோடு கூறினார், அதற்கு அந்த மகன் நீங்கள் வருவீர்கள் என்று எனக்குத் தெரியும் அப்பா அதனால்தான் நான் நம்பிக்கையுடன் இருந்தேன் மற்றும் என்னுடன் சில நண்பர்களும் இங்குச் சிக்கி உள்ளார்கள் அவர்களைக் காப்பாற்றி விட்டுப் பின்னர் என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூறினான்.இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள் இருவரது நம்பிக்கையும் வீண் போகவில்லைநம்பிக்கைகொண்டு அப்பா மகனைத் தேடி உள்ளார் மற்றும் நம்பிக்கையுடன் அப்பா வருவார் என்று சிறுவன் இருந்துள்ளான். பின்னர் இருவரும் ஆனந்த அழுகையை அதாவது ஆனந்த கண்ணீருடன் சந்தோஷம் அடைந்தார்கள்.


தன் மனைவியைக் காப்பாற்ற முடியாததால் வயதான கனவன்  செய்த வேலை...


மலைப் பிரதேசத்தில் ஒரு சிறிய கிராமம் இருந்துள்ளது.அங்கு மக்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருந்தார்கள் மற்றும் ஏதேனும் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் ஒரு மலையைச் சுற்றி செல்ல வேண்டும் சில மைல்கள் தூரம் அந்த மலையைச் சுற்றி சென்ற பிறகுதான் ஒரு நகரம் இருக்கும் அங்கே மருத்துவமனை, பள்ளிகள், போக்குவரத்து வசதிகள் அனைத்தும் இருந்தது. அந்தக் கிராமத்தில் போக்குவரத்து வசதி கிடையாது ஒரு நாள் ஒரு கணவன் மனைவி இருந்துள்ளார்கள். அந்தப் பெண்ணுக்கு  உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்குத் தூக்கி சென்று விட்டார்கள் அப்போது அந்த மலையைச் சுற்றி செல்வதற்குள் அந்தப் பெண் இறந்து விட்டார்கள்.


அந்த அதிர்ச்சியில் ஒரு நாள் அந்தக் கணவன் அந்த மலையைத் தினமும் உடைத்து கொண்டு இருந்தார்.அந்தக் கிராமவாசிகள் அனைவரும் தன் மனைவி இறந்ததால் அவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று பேசிக் கொண்டார்கள். இவரும் அதைக் கண்டு கொள்ளாமல் அந்த மலையை உடைத்துக் கொண்டே இருந்தார். சில வருடங்களுக்குப் பிறகு அந்த மலையை முற்றிலுமாக உடைத்து மலைக்கு நடுவில் பாதை அமைத்தார். அந்தப் பாதையை அமைக்கும்பொழுது அந்தக் கணவருக்கு வயது 98. கிழவனாக மாறிவிட்டார், அவர் நம்பிக்கையுடன் அந்த மலையையே உடைத்துள்ளார். அந்த மலையினால் தான் தன் மனைவி இறந்துவிட்டாள் என்று இரண்டு பாகமாக உடைத்து அந்த மலைக்கு நடுவில் பாதை அமைத்து விட்டார். மன நம்பிக்கையுடன் தான் செயலைச் செய்துள்ளார்.


Self confidence


நாம் எண்ணத்தைக் கொண்டு பயந்து விடக் கூடாது நம்மால் முடியும் என்று மன நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.


இன்றைய திருக்குறள்...


திருக்குறள்...





பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 

  கருமமே கட்டளைக் கல்

- குறள் 505

உயர்ந்த குணத்தையும் மற்றும் சிறிய குணத்தையும் உரசிக் கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைகள்  அவரவர் செய்யும் செயல்களே. ஒருவர் மன நம்பிக்கையுடன் செய்யும் செயல்களே அவரை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும்.

கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.

(மேலும் புத்தம் புதிய  சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள்  subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்து கொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).





மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏



ஹிப்னாடிசம்(Hypnotize).


அடுத்த பகுதியில் பார்க்கலாம் 👆....


கருத்துரையிடுக

0 கருத்துகள்