இந்த இணையத்தில் தருவது உங்கள்
நேரமல்ல
சிந்தனையின் முக்கியத்துவம்
தர்மம்(தானம்) (Dharma)
தான தர்மம் அதனால் சக்தி வந்துவிடுகிறது. என்பது இன்றைய பதிவில் நாம் தெளிவாகக் காண போகிறோம்.
முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் தானம் வேறு தர்மம் வேறு என்று. தானம் என்றால் ஒருவர் நம்மிடம் கேட்டபிறகு நாம் கொடுக்கும் பொருள் தானம் என்று கூறுவார்கள். தர்மம் என்றால் ஒருவர் நம்மிடம் கேட்காமலேயே நானும் வாரி வழங்குவது அது பொருளாக இருந்தாலும் சரி அல்லது ஒருவருக்கு தேவையான ஒரு சொல்லாக இருந்தாலும் சரி ஒருவருக்கு நன்மை செய்யும் வண்ணம் அவர் கேட்காமலேயே நாம் வழங்குவதுதான் தர்மம்.
தர்மம் செய்தால் என்ன பலன் உண்டாகிவிடும் என்றால்? ஒருவர் தர்ம புரியும்பொழுது அவருடைய வினைகளைத் தர்மத்தினால் வைத்துக்கொள்வார் மற்றும் அவருக்கு நல்ல நன்மை வந்து சேரும்.அக்காலத்திலேயே கூறியுள்ளார்கள் தர்மம் தலைகாக்கும் என்று.
தர்மம் தலை காக்கும் என்றால் ஒருவர் செய்கின்ற தர்மத்தை கணக்கிடாமல் செய்துவர வேண்டும் அவ்வாறு செய்தால் அது நாம் ஆபத்தான தருணத்தில் இருக்கும்பொழுது அந்தத் தர்ம செயல் நம்மைக் காப்பாற்றி வடும்.
தர்மத்தில் சிறந்த தர்மம் எது மற்றும் தானத்தில் சிறந்த தானம் எது என்று பார்ப்போம்?
தர்மத்தில் சிறந்த தர்மம் எதுவென்றாலும் ஒருவனுக்கு தேவைப்படுகின்ற நேரத்தில் தேவையான பொருட்களைத் தேவைக்கு ஏற்ற அளவில் வாரி வழங்கினாலே மிகச்சிறந்த தர்மமாகும். அப்படி என்றால் இதுவரை யாரும் அவ்வாறு வாரி வழங்கவில்லை என்று நீங்கள் யோசிக்கலாம். நீங்கள் யோசிப்பது சரிதான் மனிதப் பிறவியில் யாரும் ஒருவருக்கு தேவைப்படும் போதெல்லாம் தர்மம் அடித்துக்கொண்ட இல்லை. ஆனால் ஒருவர் இருக்கிறார் நமக்குத் தேவையான நேரத்தில் தேவைக்கேற்ப பொருளைச் சலிக்காமல் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் அவர் இறைவன்தான்.
தர்மத்தில் சிறந்த தர்மம் எது மற்றும் யார் அந்தத் தர்மத்தை செய்கிறார் என்று தெரிந்து கொள்வோம் மற்றும் இப்போது தானத்தில் சிறந்த தானம் எது என்று நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
நீங்கள் நினைப்பது சரிதான் தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் தான். ஒருுு மனிதனுக்கு முக்கியமான ஒன்றுதான் அன்னம் அதாவது உணவு. ஒருவனுக்கு நாம் அன்னதானம் அதாவது உணவு தானமாகக் கொடுத்தால், அவர்களின் பசி தீர்ந்து மற்றும் மனம் மகிழ்ந்து நம்மை வாழ்த்துவார்கள் அவ்வாறுு ஒருவர் நம்மை வாழ்த்தும்பொழுது நமக்குப் புண்ணியம் வந்துு சேரும்.
தானம் தர்மம் செய்தால் நமக்குப் புண்ணியம் நன்றாகக் கிடைக்கும் மற்றும் நாம் சந்ததிகள் நன்றாக வாழ்வார்கள்.
நமக்குத் தேவையானவற்றை நாம் எடுத்துக்கொண்டு பிறகு தன் தானம் செய்ய வேண்டும். அக்காலத்திலேயே மனிதர்கள் அந்த வாக்கியத்தைக் கூறியுள்ளார்கள் தனக்கு மிஞ்சிய தானமும் தர்மமும் என்று.
தர்மம் செய்கிறேன் என்று முழுமையாகக் கொடுத்து விடக் கூடாது நமக்குத் தேவைக்கேற்ப எடுத்துக்கொண்டு மீதமுள்ளதை சேர்த்து வைக்காமல் தானதர்மம் செய்து விட வேண்டும்.
தர்மம் என்றால் என்ன என்பது அக்காலத்தில் கூறியபடி எல்லாம் நாம் இருந்துவிட முடியாது. இக்கால சூழ்நிலையில் நாம் செய்யும் நல்ல செயல்கள் தான் தர்மம். உதாரணமாக ஒரு சிறிய கதைகள் கூறுகிறேன்.
ஒரு ஊரில் நிறைய குடும்பங்கள் வசித்து வந்தது. அந்த ஊரில் உள்ள ஒரு வீட்டில் ஒரு அம்மா மற்றும் சிறு வயது பிள்ளை ஒருவன் இருந்தான். எப்பொழுதும் ஒருவர் அந்த ஊரில் காய்கறி விற்பதற்காகத் தலையில் கூடைகளை தூக்கிக்கொண்டு வருவார்கள். அந்த ஊரில் தினமும் காய்கறிகளைக் கொண்டு வந்து விற்று செல்வார்கள். எப்பொழுதும்அந்த அம்மா மற்றும் சிறுவன் இருக்கும் வீட்டில் காய்கறிகளை வாங்குவார்கள். எப்போது காய்கறி வாங்கினாலும் பேரம் பேசி வாங்குவார்கள். வாங்குவது என்னவோ 50 ரூபாய்க்கு மட்டும்தான் ஆனால் இந்த 50 ரூபாய்க்கு காய்கறிகள் பேரம் பேசி வாங்குவார்கள்.இதே போல் எப்பொழுதும் நடந்துகொண்டே இருந்தது அந்தச் சிறுவனும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஒரு நாள் வந்து காய்கறி விற்கும் பெண் அவர்களது வீட்டிற்கு சென்று காய்கறி விற்றார்கள் பின்னர் அந்தக் காய்கறி கூடையை எப்பொழுதும் அந்த வீட்டில் இருக்கும் அம்மா தூக்கி தலையில் வைப்பார்கள். அதே போல் அன்றும் தூக்கி தலையில் வைக்கும்பொழுது அவர்களுக்கு ஒரு வித மயக்கம் கொண்டு சாய்ந்தனர் அதற்கு அந்த வீட்டிலிருந்து அம்மா என்ன ஆயிற்று காலையில் சாப்பிட்டாயா இல்லையா என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அந்தக் காய்கறி விற்கும் பெண் இந்தக் காய்கறிகளை விற்று தான் நான் சாப்பிட வேண்டும் என்று கூறினார்கள். அவருக்கு அந்த வீட்டில் இருந்த அம்மா முதலில் நீ சாப்பிடு என்று அவர்களது வீட்டிலிருந்த உணவுப் பலகாரங்கள் அனைத்தும் வைத்துச் சாப்பிட வைத்தார்கள். இந்தச் சிறுவனும் பார்த்துக்கொண்டிருந்தான், ஒருநாள் அந்தச் சிறுவன், அவன் அம்மாவிடம் கேட்டான், அம்மா எப்பொழுதும் நீங்கள் அந்த ஐம்பது ரூபாய் காய்கறிகளுக்குப் பேரம் பேசிச் சண்டை விடாத குறையாக வாங்குவீர்கள், ஆனால் இப்போது நம் வீட்டில் இருக்கும் உணவு கொடுக்கிறீர்களே அது 100 ரூபாய்க்கும் மேல் செலவு தானே என்று கேட்டான். அதற்கு அந்த அம்மா ஒரு பதில் கூறினார்கள் தம்பி வியாபாரத்தில் நாம் கணக்கு பார்க்கவில்லை என்றால் தவறு அதே தர்மத்தில் கணக்குப் பார்த்தால் தவறு ஆதலால் தர்மம் செய்யும்பொழுது கணக்கு பார்க்கவே கூடாது என்று கூறினார்கள்.
தர்மத்தால் கிருஷ்ண பரமாத்மாவை கெஞ்சியுள்ளார்.
நம் அனைவருக்கும் மகாபாரதப்போர் தெரியும். அதில் கர்ணனை நன்கு நமக்குத் தெரியும். கர்ணன் யார் என்றால் தர்மம் செய்வதில் சிறந்தவன் அவர் வாழ்நாள் முழுவதும் தர்மம் செயல்களையே தான் செய்துள்ளார்.
மகாபாரதப்போரில் கர்ணனுக்கும் மற்றும் அர்ஜுனனுக்கும் சண்டை நடக்கும்பொழுது அர்ஜுனனின் வில் கர்ணன் மீது பற்றும் கர்ணன் இறக்கவில்லை. அப்பொழுது அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கேட்டார் கண்ணா ஏன் என்னால் கர்ணனை அழிக்க முடியவில்லை என்று.
அதற்குக் கண்ணன் என்ன கூறினார் என்றால், அர்ஜுனா உன்னால் மட்டுமில்லை என்னாலும் கர்ணனை அழிக்க முடியாது ஏனென்றால் கர்ணன் அவ்வளவு தர்ம செயல்களைச் செய்து உள்ளான். அவன் செய்த தர்மம் அவனைக் காக்கிறது என்று கூறினார். ஆனால் மகாபாரதப்போர் பாண்டவர்கள் ஜெயித்து ஆக வேண்டும் என்று கிருஷ்ணர் கர்ணனிடம் சென்று கேட்டாராம் எனக்கு ஒரு தர்மம் செய்வீர்களா என்று. அதற்குக் கர்ணன் என்ன வேண்டுமென்று கேளுங்கள் என்றார். கிருஷ்ணர் எனக்கு நீ இந்நாள் வரை செய்து வந்திருந்த புண்ணியத்தை எனக்குத் தாரைவார்த்து குடுங்கள் என்று கிருஷ்ணர் கேட்டுள்ளார்.
கிருஷ்ணர் கர்ணனிடம்.
கர்ணா, உன் தர்ம பலன்கள் உன்னைக் காக்கிறது அதை எனக்குத் தாரைவார்த்து கொடு என்று கெஞ்சினார் கண்ணன்.
இப்பொழுது தெரிகிறதா தர்மம் எவ்வாறு காக்கிறது என்று. தர்மம் செய்யுங்கள் எப்பொழுதும் ஆனால் தனக்கு மிஞ்சிய தானமும் தர்மமும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்......
இன்றைய திருக்குறள்
தானம் தர்மம் செய்தால் நமக்குப் புண்ணியம் நன்றாகக் கிடைக்கும் மற்றும் நாம் சந்ததிகள் நன்றாக வாழ்வார்கள்.
நமக்குத் தேவையானவற்றை நாம் எடுத்துக்கொண்டு பிறகு தன் தானம் செய்ய வேண்டும். அக்காலத்திலேயே மனிதர்கள் அந்த வாக்கியத்தைக் கூறியுள்ளார்கள் தனக்கு மிஞ்சிய தானமும் தர்மமும் என்று.
தர்மம் செய்கிறேன் என்று முழுமையாகக் கொடுத்து விடக் கூடாது நமக்குத் தேவைக்கேற்ப எடுத்துக்கொண்டு மீதமுள்ளதை சேர்த்து வைக்காமல் தானதர்மம் செய்து விட வேண்டும்.
தர்மம் என்றால் என்ன என்பது அக்காலத்தில் கூறியபடி எல்லாம் நாம் இருந்துவிட முடியாது. இக்கால சூழ்நிலையில் நாம் செய்யும் நல்ல செயல்கள் தான் தர்மம். உதாரணமாக ஒரு சிறிய கதைகள் கூறுகிறேன்.
ஒரு ஊரில் நிறைய குடும்பங்கள் வசித்து வந்தது. அந்த ஊரில் உள்ள ஒரு வீட்டில் ஒரு அம்மா மற்றும் சிறு வயது பிள்ளை ஒருவன் இருந்தான். எப்பொழுதும் ஒருவர் அந்த ஊரில் காய்கறி விற்பதற்காகத் தலையில் கூடைகளை தூக்கிக்கொண்டு வருவார்கள். அந்த ஊரில் தினமும் காய்கறிகளைக் கொண்டு வந்து விற்று செல்வார்கள். எப்பொழுதும்அந்த அம்மா மற்றும் சிறுவன் இருக்கும் வீட்டில் காய்கறிகளை வாங்குவார்கள். எப்போது காய்கறி வாங்கினாலும் பேரம் பேசி வாங்குவார்கள். வாங்குவது என்னவோ 50 ரூபாய்க்கு மட்டும்தான் ஆனால் இந்த 50 ரூபாய்க்கு காய்கறிகள் பேரம் பேசி வாங்குவார்கள்.இதே போல் எப்பொழுதும் நடந்துகொண்டே இருந்தது அந்தச் சிறுவனும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஒரு நாள் வந்து காய்கறி விற்கும் பெண் அவர்களது வீட்டிற்கு சென்று காய்கறி விற்றார்கள் பின்னர் அந்தக் காய்கறி கூடையை எப்பொழுதும் அந்த வீட்டில் இருக்கும் அம்மா தூக்கி தலையில் வைப்பார்கள். அதே போல் அன்றும் தூக்கி தலையில் வைக்கும்பொழுது அவர்களுக்கு ஒரு வித மயக்கம் கொண்டு சாய்ந்தனர் அதற்கு அந்த வீட்டிலிருந்து அம்மா என்ன ஆயிற்று காலையில் சாப்பிட்டாயா இல்லையா என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அந்தக் காய்கறி விற்கும் பெண் இந்தக் காய்கறிகளை விற்று தான் நான் சாப்பிட வேண்டும் என்று கூறினார்கள். அவருக்கு அந்த வீட்டில் இருந்த அம்மா முதலில் நீ சாப்பிடு என்று அவர்களது வீட்டிலிருந்த உணவுப் பலகாரங்கள் அனைத்தும் வைத்துச் சாப்பிட வைத்தார்கள். இந்தச் சிறுவனும் பார்த்துக்கொண்டிருந்தான், ஒருநாள் அந்தச் சிறுவன், அவன் அம்மாவிடம் கேட்டான், அம்மா எப்பொழுதும் நீங்கள் அந்த ஐம்பது ரூபாய் காய்கறிகளுக்குப் பேரம் பேசிச் சண்டை விடாத குறையாக வாங்குவீர்கள், ஆனால் இப்போது நம் வீட்டில் இருக்கும் உணவு கொடுக்கிறீர்களே அது 100 ரூபாய்க்கும் மேல் செலவு தானே என்று கேட்டான். அதற்கு அந்த அம்மா ஒரு பதில் கூறினார்கள் தம்பி வியாபாரத்தில் நாம் கணக்கு பார்க்கவில்லை என்றால் தவறு அதே தர்மத்தில் கணக்குப் பார்த்தால் தவறு ஆதலால் தர்மம் செய்யும்பொழுது கணக்கு பார்க்கவே கூடாது என்று கூறினார்கள்.
தர்மத்தால் கிருஷ்ண பரமாத்மாவை கெஞ்சியுள்ளார்.
நம் அனைவருக்கும் மகாபாரதப்போர் தெரியும். அதில் கர்ணனை நன்கு நமக்குத் தெரியும். கர்ணன் யார் என்றால் தர்மம் செய்வதில் சிறந்தவன் அவர் வாழ்நாள் முழுவதும் தர்மம் செயல்களையே தான் செய்துள்ளார்.
மகாபாரதப்போரில் கர்ணனுக்கும் மற்றும் அர்ஜுனனுக்கும் சண்டை நடக்கும்பொழுது அர்ஜுனனின் வில் கர்ணன் மீது பற்றும் கர்ணன் இறக்கவில்லை. அப்பொழுது அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கேட்டார் கண்ணா ஏன் என்னால் கர்ணனை அழிக்க முடியவில்லை என்று.
கிருஷ்ணர் கர்ணனிடம்.
கர்ணா, உன் தர்ம பலன்கள் உன்னைக் காக்கிறது அதை எனக்குத் தாரைவார்த்து கொடு என்று கெஞ்சினார் கண்ணன்.
இப்பொழுது தெரிகிறதா தர்மம் எவ்வாறு காக்கிறது என்று. தர்மம் செய்யுங்கள் எப்பொழுதும் ஆனால் தனக்கு மிஞ்சிய தானமும் தர்மமும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்......
இன்றைய திருக்குறள்
திருக்குறள்
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
- குறள் 221
இல்லாதவனுக்கு நாம் கொடுக்கும் கொடைதான் தர்மமாகும், மற்றவர்களுக்கெல்லாம் கொடுத்தால் நாம் திரும்பி எதிர்பார்த்து கொடுப்பது போல் ஆகும். எப்பொழுதும் தர்மம் செய்ய வேண்டும் என்று எண்ணினால் யாருடைய சொல்லும் கேட்காமல் எண்ணியதை நிறைவேற்றுங்கள். தர்மம் தலைக் காக்கும்....
கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.
(மேலும் புத்தம் புதிய சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள் subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்துகொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).
மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏
பச்சாதாபம்(Empathy)...
அடுத்த பகுதியில் பார்க்கலாம் 👆....
0 கருத்துகள்