இந்த இணையத்தில் தருவது உங்கள்
நேரமல்ல
சிந்தனையின் முக்கியத்துவம்
பச்சாதாபம் (Empathy)
பச்சாதாபம் என்பதை ஆங்கிலத்தில் எம்பதி(Empathy) என்பது அர்த்தம். பச்சாதாபம் என்றால் என்ன என்பது அனைவருக்கும் தெரியாது. அனைவரும் ஒன்று கேள்விப்பட்டிருப்போம் சிம்பதி(Sympathy) என்று.
முதலில் நாம் சிம்பதி(Sympathy) என்றால் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சிம்பதி என்றால் ஒருவர் மீது நாம் அக்கறை கொள்வது அதாவது ஒரு வித வருத்தம் அல்லது பாசம் கொள்வது, சிம்பதி முழுமையான அர்த்தம் என்னவென்றால் அனுதாபம் என்று பொருள். அப்பொழுதுு எம்பதி என்னவென்றால் அதுவும் ஒருவர் மீது கொண்ட இரக்கம். இரண்டிற்கும் அர்த்தம் ஒன்றுதான் ஆனால் பொருள் வேறு, எம்பதி சொல்லுக்குச் சரியான பொருள் பச்சாதாபம்.
உதாரணங்களோடு பச்சாதாபம் மற்றும் அனுதாபம்.
உதாரணமாகப் பச்சாதாபம் என்றால் தற்போது கற்பனையாகச் சிந்தியுங்கள் ஒருவனுக்கு உடம்பு சரியில்லை என்றால் மற்றவர் சென்று அவரது உணர்வைப் புரிந்து கொள்வது, எப்படி என்றால் நமக்குக் காய்ச்சல் அடித்தால் எவ்வாறு தலை வலிக்கும், உடல் எவ்வளவு வலி இருக்கும் என்பதை உணர்ந்து மற்றும் பேசுவதுதான் எம்பதி...
அனுதாபம் என்றால் அனைவருக்குமே தெரியும் ஒருவர் மீது நாம் கொண்ட ஒருவித அக்கறை உணர்வு மட்டும்தான் அதாவது உடல்நிலை சரியில்லாத அவனிடம் சென்று. அவன் கூறுகிறான் என்றால், 'உடல் ரொம்ப முடியவில்லை' என்று அப்பொழுது நாம் அப்படியே, அச்சச்சோ, என்று வருத்தம் மட்டும் செய்வோம் அவரது வலியை நாம் புரிந்து கொள்ள மாட்டோம் அதுதான் சிம்பதி.
பச்சாதாபம் என்றால் ஒருவரின் உணர்ச்சியை நாம் உணர்ந்து புரிந்து கொள்வதுதான் பச்சாதாபம். இன்றைய கால சூழ்நிலையில் அனைவரும் அவ்வாறு இருப்பதில்லை. பச்சாதாபம் என்றால் ஒருவனின் சிந்தனையை மற்றும் மனவலியை அவர் சூழ்நிலையிலிருந்து அதாவது அவர் எவ்வாறு சிந்திக்கிறார் எவ்வாறு வருத்தப்படுகிறார் என்றெல்லாம் நாம் சிந்தித்து மற்றும் புரிந்து கொள்வதுதான் எம்பதி.
அதாவது ஒரு மனிதனின் மூளையுடன் அவரைத் தொடாமல் அவர் நினைப்பதை நாம் நினைத்துக் கொள்வது. அவ்வாறு நாம் பச்சாதாபம் பயிற்சியை நாம் எங்குப் பயன்படுத்துகிறோம் ஆனால் நாம் விளையாடும் சதுரங்க(Chess) விளையாட்டில் நமது மூளை தொடர்பு கொள்கிறது. எவ்வாறென்றால் அந்த விளையாட்டின் விதிகளின்படி ராஜா வைக்காப்பாற்ற வேண்டும்.அதன்படி இருவரும் எவ்வாறு சதுரங்கப் பலகையில் உள்ள காய்களை நகர்த்த போகிறோம் என்று இருவரும் எதிராளி நினைப்பதையும் அவர் நினைப்பதையும் இரண்டும் நினைத்து உணர்ந்து காய்களை (Coins) நகர்த்துவார்கள்.
இன்றைய சூழ்நிலையில் அனைவருக்கும் பச்சாதாபம் எண்ணம் இல்லையென்றால் அனைவருக்கும் அவரவர் சூழ்நிலை மிகக் கடினமாக உள்ளது.ஒருவன் மற்றொருவரை பற்றிச் சிந்தித்து மற்றும் அவர்களது உணர்ச்சியை உணர்ந்து பேசுவது இயலாத காணமக மாறிவிட்டது. அனைவரிடமும் பச்சாதாபம் இல்லை ஏன் என்றால் யார் நம்மைப் போலவே இருக்கிறார்களோ அவர்கள் தான் நம்மை உணர்ந்து நம்முடைய வலிகளைத் தெரிந்து கொள்கிறார்கள்.
ஒரு சிறிய உண்மை சம்பவத்துடன் இந்தப் பதிவைத் தெளிவுபடுத்துகிறேன்.
நம்முடைய காலத்தில் அனைவரும் வீட்டில் ஒரு வளர்ப்பு பிராணியை வளர்ப்பது வழக்கமாகிவிட்டது. இன்றைய காலத்தில் சிறு குழந்தைகளுக்குப் பிடித்த வளர்ப்பு பிராணி என்னவென்றால் நாய் குட்டிகள். அதேபோல் ஒரு நகரத்தில் ஒரு சிறிய வளர்ப்பு பிராணிகள் விற்கும் கடை இருந்தது. ஒரு சிறுவன் எப்பொழுதும் அந்தக் கடையைத் தாண்டிச் செல்வது வழக்கமாக இருந்தது அப்பொழுது அவனுக்கும் ஒரு வளர்ப்பு பிராணி வாங்க வேண்டும் என்று ஆசையாக இருந்தான். தினமும் சிறுக சிறுக பணத்தை சேர்த்து அவனால் முடிந்தவரை 500 ரூபாய் பணத்தை கொண்டு சென்று அந்த வளர்ப்பு பிராணிகள் விற்கும் கடைக்குச் சென்றான். அப்போது அங்கு இருந்த கடையின் முதலாளி என்ன வேண்டும் தம்பி என்று அந்தச் சிறுவனைப் பார்த்துக் கேட்டார்.அதற்கு அந்தச் சிறுவன் எனக்கு ஒரு நாய்க்குட்டி வேண்டும் என்றான். அந்தக் கடையில் பலவித நகரங்களைச் சேர்ந்த மற்றும் பலவித நாய்கள் இருந்தது. இந்தச் சிறுவன் அவனிடமிருந்த 500 ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்தான் அதற்கு அந்தக் கடைக்காரர் 500 ரூபாய்க்கு என்ற நாய் குட்டிகளும் இல்லை என்று கூறிவிட்டார். இவன் மனவருத்தத்துடன் கடையில் இருந்த நாய்க்குட்டிகளை பார்த்தான் அப்பொழுது ஓரமாக ஒரு நாய்க்குட்டி இருந்தது.கடைக்காரரிடம் ஏன் இந்த நாய்க்குட்டியை மட்டும் தனியே பிரித்து வைத்துள்ளார்கள் என்று கேட்டான், அதற்கு அந்தக் கடைக்காரன் இந்த நாய்க்குட்டியின் கால் உடைந்துவிட்டது, யாரும் வாங்க மாட்டார்கள் என்று கூறினார்.அந்தச் சிறுவன் உடனடியாகக் கோபம் கொண்டு எனக்கு இந்த நாய்க்குட்டியை தருவீர்களா? ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் என்றும், மற்றும் அதனுடைய விலை எவ்வளவு என்றும் கேட்டான். கடைக்காரர் இது வேண்டுமானாலும் இலவசமாக எடுத்துக்கொள் எனக்குப் பணம் தேவையில்லை இது வைத்திருந்தாலும் யார் வாங்கிக் கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.அந்தச் சிறுவன் நீங்கள் அவ்வாறு கூறக் கூடாது மற்ற நாய்களின் விலை எவ்வளவு என்று கேட்டான் அதற்கு அவர் 5000 ரூபாய் என்று கூறினார். அந்தச் சிறுவனும் நான் இந்த நாய்க்குட்டியும் அதே விலைக்குத் தான் வாங்குவேன் என்றான்.அதற்கு அந்தக் கடைக்காரர் நான் தான் இலவசமாக எடுத்துக்கொள் என்று சொல்கிறேன் நீ ஏன் பணம் தருகிறார் என்று கேட்டார் மற்றும் அந்தச் சிறுவனைப் பார்த்து மனம் 'குழம்பி விட்டதா', என்று சிந்தித்தார்.அதற்கு அந்தச் சிறுவன் நான் இந்த நாய் குட்டியை எடுத்துக் கொள்கிறேன் இப்பொழுது 500 ரூபாய் தருகிறேன் மீதி உள்ள பணத்தை நான் உங்களுக்குக் கொடுத்துவிடுவேன் என்று சொல்லினான்.அதற்கு அந்தக் கடைக்காரர் என்ன இந்தச் சிறுவனுக்கு மனம் குழம்பி விட்டது. நான் தான் இலவசமாகக் கொடுக்கிறேன் என்று கூறியும் பணம் தருகிறேன் என்று கூறுகிறானே என்று நினைத்துச் சரி நமக்கு வந்தவரை லாபம் என்று அந்த 500 ரூபாயை பெற்றுக் கொண்டார் மற்றும் நீ எடுத்துக்கொள் அந்த நாயை என்று அந்தச் சிறுவனைப் பார்த்துக் கூறினார். அந்தச் சிறுவன் காலுடைந்த நாய்க்குட்டியிடம் செல்லும்போது கடைக்காரர் அந்தச் சிறுவன் நடந்து செல்வதைப் பார்த்தார் அப்போது தான் அவருக்குத் தெரிந்தது அந்தச் சிறுவனும் சரியாக நடக்க முடியாதவன் என்று.
இப்பொழுது தெரிகிறதா நாம் ஏன் அனைவருக்கும் பச்சாதாபம்(Empathy) உணர்வு இல்லை என்று கூறுகிறோம் என்று. அந்தச் சிறுவனுக்கு மட்டும்தான் தெரிந்துள்ளது நம்மைப் போலவே கால் உடைந்த நாய்க்குட்டியின் வலிகளையும் மற்றும் மன வருத்தத்தையும் தெரிந்துதான் அந்தச் சிறுவன் உடைந்த கால் உடைய நாயே பணம் கொடுத்து வாங்க நினைத்தான்.
அதே அந்தச் சிறுவனும் ஒழுங்காக நடப்பவனாக இருந்தாலும் அந்தக் கால் உடைந்த நாய்க்குட்டியை வாங்கி இருக்க மாட்டான். ஏனென்றால் அவனுக்கு அந்த வலிகள் தெரிந்திருக்காது.
யார் அவரைப் போலவே ஒருவரை சந்தித்தால் மட்டும் தான் அவர்களுக்குப் பச்சாதாப உணர்வு வெளிப்படுகிறது மற்றும் வலிகள் தெரிகிறது.
மற்றவர்களை மனமும் வலிக்காதவண்ணம் பேசி மற்றும் புரிந்து நடந்து கொண்டால் பரிபூர்ணமாக இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும்...
இன்றைய திருக்குறள்
திருக்குறள்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
- குறள் 511
நம்மிடம் ஒரு செயலைச் செய்து முடிக்கக் கொடுத்தால் நாம் அதை நன்கு ஆராய்ந்து நன்மையைச் செய்ய வேண்டும். ஒரு இடத்தில் எவ்வாறு பேச வேண்டும் என்று நன்கு ஆராய்ந்து பேச வேண்டும் தீமையாகப் பேசி ஒருவர் மனதை புண்படுத்தக் கூடாது.
கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.
(மேலும் புத்தம் புதிய சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள் subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்துகொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).
மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏
அடுத்த பகுதியில் பார்க்கலாம் 👆....
0 கருத்துகள்