இந்த இணையத்தில் தருவது உங்கள்
நேரமல்ல
சிந்தனையின் முக்கியத்துவம்
விளக்கு தீபத்தின் சக்தி
(THE POWER OF DEEPAM)
தீபம்
நாம் ஏற்றம் தீபத்தின் மூலமாகக் கடவுளின் அபரிவிதமான சக்தியை நாம் எளிதாகப் பெற முடியும்.ஒரு இருள் சூழ்ந்த இடத்தில் தீபம் ஏற்றினால் அந்த இருள் நீங்கி எவ்வாறு பிரகாசமாக அந்த இருண்ட பகுதி மாறுகிறதோ அதே போல் ஒரு வீட்டில் விளக்கு ஏற்றினால் அவர்களது வாழ்க்கை பிரகாசமாக அடையும் மற்றும் பரிபூரணமான இறைவன் அருள் கிடைக்கும்.
அனைவருக்கும் நன்றாகத் தெரியும் 63நயன்மார்கள் என்று அதில் மூன்று நாயன்மார்கள் விலக்கினால் இறைவன் அருள் பெற்று நாயன்மார்களாக மாறியுள்ளார்கள். இறைவன் அருள் எப்பொழுதும் இறுதியில் நமக்குக் கிடைக்கிறது. சரி வாருங்கள் அந்த மூன்று நாயன்மார்களில் யாரென்று முதலில் தெரிந்து கொள்ளலாம்.
நமிநந்தியடிகள் :
இவர் சோழ நாட்டைச் சேர்ந்தவர் இவரது குலம் அந்தணர். இவர் இறைவன் மீது பக்தி கொண்டிருந்ததால் இவர் விளக்கு தீபத்தால் இறைவனை வழிபட்டு இறைவன் அருளைப் பெற்றார்.நாம் அனைவரும் எவ்வாறு விளக்கு ஏற்றம் என்றால் ஏதேனும் ஒருஎண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுவோம் ஆனால் இவர் தண்ணீர் ஊற்றி விளக்கேற்றி இறைவன் அருளைப் பெற்றார். இவருக்குப் பூஜை செய்யும் நாள் வைகாசி பூசம் நட்சத்திரம் ஒன்று பூஜை செய்வார்கள்.
கணம்புல்லர் :
கணம்புல்லர் என்கிற வரும் தீபத்தினால் இறைவன் அருள் பெற்றவர். இவரும் சோழ நாட்டைச் சேர்ந்தவர், இவர் செங்குந்தர் குலத்தைச் சேர்ந்தவர். இருவர் எவ்வாறு தீபத்தை ஏற்றி இறைவனை வழிபட்டார் என்றால் தன் தலையிலேயே தீபச்சுடர் ஏற்றி இறைவனை வழிபட்டார். இவருக்குப் பூஜை செய்யும் நாள் கார்த்திகை மாசம் கார்த்திகை நட்சத்திரம் அதாவது கிருத்திகை நட்சத்திரம் ஆகும்.
கலிய நாயனார் :
இவரும் இறைவனை தீபச்சுடர் ஆக வழிபட்டு இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் தொண்டை நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் இவரது குலம் செக்கார். இவர் எவ்வாறு இறைவனை வழிபட்டார் என்றால் விளக்கு ஏற்றவும் எண்ணைக்கு பதிலாக அவரவருடைய இரத்தத்தை ஊற்றி விளக்கை இயற்றியுள்ளார். இவருக்கு ஆடிக் கேட்டை அப்பொழுது பூஜை செய்வார்கள்.
இவர்கள் மூன்று பெரும் தான் இறைவன் அருளை எனக்குத் தீபத்தால் பெற்று நாயன்மார்கள் ஆக மாறினார்.
நாம் ஏற்றும் தீபத்தில் ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. நாம் ஏற்றும் விளக்கு தீபத்தில் ஐந்து முகம்வரை ஏற்றுவோம்
ஒரு முக தீபம்
நாம் ஏற்றும் விளக்கிதுவே ஒரு முகம் கொண்டு அதாவது ஒரு திரி கொண்டு ஏற்றினால் நாம் நினைத்த செயல்களை வெற்றி காண்போம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நினைத்த செயல்கள் வெற்றி பெறும்.
இரண்டு முக தீபம்
இரண்டு முகம் கொண்டு நாம் வீட்டில் தீபம் ஏற்றினால் வீட்டில் உள்ள குடும்ப பிரச்சனைகள் நீங்கும் மற்றும் குடும்பத்தில் சந்தோஷமாகச் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
மூன்று முக தீபம்
மூன்று முகம் கொண்டு தீபம் ஏற்றினால் புத்திரதோஷம் நீங்கும்.
நான்கு முக தீபம்
ஒருவர் நான்கு முகம் கொண்டு தீபம் வீட்டில் ஏற்றினால் அவர்களது வீடு பரிபூரணமான மகாலட்சுமி அருள் பெற்று செல்வம் செழிக்கும்.
ஐந்து முக தீபம்
ஐந்து முகங்களைக் கொண்டு தீபம் ஏற்றினால் ஒருவரது வீட்டில் சகல சவுபாக்கியம் உண்டாகும்.
அனைவருக்கும் சிதம்பர ரகசியம் என்னவென்று தெரிந்திருக்கும் தெரியவில்லை என்றால் சுலபமாகக் கூறுகிறேன் சிதம்பர ரகசியம் என்றால் ஆகாய சக்தி. நம்மை வழிநடத்துவது பஞ்சபத சக்தி அதேவேளை ஒரு சக்தியானது ஆகாய சக்தி அது தான் சிதம்பர ரகசியம்.
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் நெருப்பு சக்தியாகும். சுடர் ஒளியாய் நம்மைக் காக்கும் இறைவன் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபமாகக் காட்சி அளிக்கிறார்.
நாம் ஏற்றுகின்ற விளக்குகளின் திசைகள் ஒவ்வொரு துன்பங்களையும் நீக்கும்.
கிழக்கு திசை கொண்டு விளக்கை ஏற்றினால் வீட்டில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.
மேற்கு திசை கொண்டு விளக்கு ஏற்றினால் கடன் பிரச்சனைகள் நீங்கும்.
வடக்கு திசை கொண்டு விளக்கை ஏற்றினால் திருமண தோஷங்கள் விலகித் திருமணம் விரைவில் நடைபெறும்.
மேற்கு திசை கொண்டு விளக்கை ஏற்றக் கூடாது எப்பொழுதும்...
நாம் ஏற்றும் தீபத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருக்கலாம் ஆனால் தீபத்தினால் இறைவன் அருள் எளிதில் பெறலாம்.
எண்ணங்களைக் கொண்டு ஏற்றும் தீபங்கள்.
- நெய் தீபம்
- நல்லெண்ணெய் தீபம்
- தேங்காய் எண்ணெய் தீபம்
- விளக்கெண்ணெய் தீபம்
- இலுப்பெண்ணை தீபம்
- வேப்பெண்ணை தீபம்
நெய் தீபத்தைத் தவிர மற்ற எண்ணெய்களைக் கொண்டதுதான் பஞ்ச கூட்டு என்ன என்று கூறுவார்கள்.
பஞ்ச கூட்டு எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் குலதெய்வ அருள் கிடைக்கும் மற்றும் சிவனுக்கு முருகருக்கு பெருமாள் பஞ்ச கூட்டு எண்ணையை ஏற்றி வழிபடலாம்.
அம்மனுக்கு எந்த எண்ணெய்கூற்று விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் என்றால் வேப்பெண்ணெய் இலுப்பெண்ணெய் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் கொண்டு விளக்கு ஏற்றினால் நல்லது.
விநாயகப் பெருமான் அருள் கிடைக்க வேண்டுமானால் தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்ற வேண்டும்.
மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டுமானால் நீ தீபமேற்றினால் லக்ஷ்மி கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும்.
நல்லெண்ணெய் கொண்டு பைரவருக்கு விளக்கு ஏற்றினால் நல்லது.
நாம் அதனை ஒன்றை தெரிந்து இப்பதிவை முடித்துக் கொள்வோம். நாம் விளக்குத் தீபம் ஏற்றும் எண்ணெய்கள் மற்றும் தசைகளை நன்கு தெரிந்து கொண்டோம். எந்த விளககை கொண்டு ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.
மண் அகல் விளக்குத் தீபம்
மண் அகல் கொண்டு வீட்டில் தீபம் ஏற்றினால் பீடைகள் விலகும்.
வெள்ளி விளக்குத் தீபம்
வெள்ளி விளக்கு கொண்டு வீட்டில் தீபம் ஏற்றினால் திருமகள் அருள் கிடைக்கும், அதாவது மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.
பஞ்ச உலோக விளக்குத் தீபம்
பஞ்ச உலோகத்தைக் கொண்டு தீபம் வீட்டில் ஏற்றினாள் தேவதை வசியம் உண்டாகும்.
வெங்கல விளக்குத் தீபம்
வெங்கல விளக்கைக் கொண்டு தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் பெருகும் மற்றும் ஆரோக்கியம் உண்டாகும்.
இரும்பு விளக்குத் தீபம்
இரும்பு விளக்கு கொண்டு தீபம் ஏற்றினால் சனீஸ்வர தோஷங்கள் விலகும்.
நமக்கு விளக்கு வீடும் எப்பொழுதும் வெளிச்சத்தை மட்டும் அல்ல நம் வாழ்வில் இறைவனின் அருள் எளிதாக மற்றும் விரைவில் கிடைப்பதற்காக ஏற்றப் படுகிறோம்.
இறைவனுக்கு எந்தவித பூஜைகள் செய்யும்பொழுது முதலில் தீபமேறறி பின்னரே பூஜைகளைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
விளக்குகள் ஏற்றும் நேரங்கள் எப்பொழுது என்றால் காலை 4 மணி முதல் 6 மணிவரை அதாவது சூரிய உதயத்திற்கு முன் நாம் விளக்கு ஏற்ற வேண்டும் அவ்வாறு ஏற்றும்பொழுது நாம் குளித்துச் சுத்தமாக இருக்க வேண்டும்.
மற்றும் மாலை பொழுது விளக்கு ஏற்றும்பொழுது சூரியன் மறையும்பொழுது ஏற்ற வேண்டும் அதாவது ஆறு மணி அளவில் தீபத்தை ஏற்றி இறைவனை வழிபட வேண்டும்.
இன்றைய திருக்குறள்
திருக்குறள்
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
- குறள் 299
இருளை மட்டும் நீக்கும் விளக்கு விளக்கல்ல. ஒருவன் இறைவன் மீது கொண்ட தீய எண்ணத்தை விளக்கும் விளக்கே விளக்காக.
கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.
(மேலும் புத்தம் புதிய சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள் subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்துகொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).
மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏
அடுத்த பகுதியில் பார்க்கலாம் 👆....
0 கருத்துகள்