ஒலி தியானம் (Sound Meditation)



இந்த இணையத்தில் தருவது உங்கள்

 நேரமல்ல

 சிந்தனையின் முக்கியத்துவம்



ஒலி தியானம்

 (Sound Meditation)


Meditation sound






என்ன இது புதிதாக ஒலி தியானம் என்று கூறுகிறேன் என்று நீங்கள் சிந்திக்கலாம் அல்லது ஏதேனும் எழுத்துப் பிழையா அவ்வாறு ஏதேனும் இருக்கிறதா என்று நீங்கள் சந்திக்கலாம். ஆனால் இதே ஒளி தியானம் வேறு ஒலி தியானம் வேறு என்பதை இப்பதிவில் கூறிக்கொள்கிறேன்.

சரி ஒளி ஒலி என்கின்ற வார்த்தைக்கு உங்களுக்குப் பொருள் நன்றாகத் தெரியும் என்று நான் நினைக்கிறேன். நாம் கேட்கும் ஒவ்வொரு ஒலியும் மிகுந்த சக்தி உள்ளது. எவ்வாறு என்று நீங்கள் சிந்திக்கலாம்.ஒரு அறிவுபூர்வமான மற்றும் நிரூபிக்கப்பட்ட உண்மையை இப்பதிவில் கூறி மற்றும் ஒலி தியானத்தை விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது

அனைவருக்கும் பாடல்கள் கேட்கப் பிடிக்கும் வெளிநாட்டில் இரண்டு முதியவரின் மூலகளை பரிசோதிக்க ஒருவித உத்தியைக் கையாண்டு உள்ளார்கள் அதாவது முதியவரின் ஞாபக சக்தியைப் பரிசோதிக்க ஒரு செயலைச் செய்துள்ளார்கள். இருவருக்கும் ஒரு பொருளைக் கொடுத்து மற்றோரிடத்தில் வைக்கும்படி கூறியுள்ளார்கள் விஞ்ஞானிகள். இருவரும் மற்றோர் இடத்தில் கொண்டு சென்று வைத்துள்ளார்கள் அந்தப் பொருளை.அப்பொழுது ஒரு முதியவர் மட்டும் இசை கேட்கும் பழக்கம் கொண்டுள்ளார் மற்றொருவர் அதையெல்லாம் கேட்கும் பழக்கம் இல்லாதவர். சில மாதங்கள் கழித்து அந்தப் பொருளை எடுத்து வரச்சொல்லி விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள் இருவரும் முதியவர்கள் என்பதால் ஞாபகசக்தி குறைந்திருக்கும் முயன்று விஞ்ஞானிகளையும் கணக்கு. ஆனால் அவர்கள் நினைத்தது போலவே ஒரு முதியவருக்கு மட்டும் அந்தப் பொருளை எங்கு வைத்தேன் என்று மறந்துள்ளார் மற்றொருவர் ஞாபகமாக எடுத்து வந்து கொடுத்தார்.அப்போதுதான் விஞ்ஞானிகள் அவர்களது ஞாபக சக்தியைக் கண்டபோது ஒருவர் பாடல்கள் கேட்கும் பழக்கம் இருப்பதால் ஞாபகசக்தி அதிகமாகவே உள்ளது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்டது.

ஒலியின் தியானம்

நாம் அனைவரும் நினைக்கலாம் தியனம் என்றால் மனதை ஒருநிலைப் படுத்துவது தானே எந்தவித சப்தமும் இல்லாமல் அமைதியாக இருப்பதுதான் தியானம் என்று அனைத்து இடத்திலும் கூறுகிறார்கள் என்று நீங்கள் சிந்திக்கலாம்.நீங்கள் சிந்திப்பது சரிதான் தியானம் என்றால் நம் மனதை ஒருநிலைப்படுத்தி மற்றும் அமைதியாக அமர்ந்து இருப்பது தான் தியானம் என்று நாம் பதிவு ஏற்கனவே கூறியுள்ளோம் மற்றும் அனைவரும் அவ்வாறுதான் கூறியுள்ளார்கள்.
தியானம் என்றால் என்ன என்பதை தெளிவாகத் தெரிந்துகள்ள நம் பதிவில் ஒரு பகுதியாகக் கூறப்பட்டுள்ளது இப்பதிவைப் படித்து முடித்து அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒலி தியானம் என்றால் நாம் ஒருவித ஒலியை நமக்குள் மட்டும் கேட்கும்படி மற்றும் அந்த ஒலியைக் கொண்டே நம் அனைத்து வித சித்திகளையும் பெறுவதுதான் ஒலி தியானம்.

ஒலி‌ தியானம் செய்தால்

நம்மை அமர்ந்து ஒரு இடத்தில் தியானம் செய் மற்றும் மனதை கட்டுப்படுத்தும் என்று கூறினால், இறுதியில் நம் மனம் ஒருநிலை ஆகாது நாம் எப்போது தியானம் செய்ய நினைக்கிறோமோ அப்போது தான் எண்ண ஓட்டம் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் பல ஞாபகங்கள் உண்டாகும்.
ஒளி தியானம் எவ்வாறு செய்ய வேண்டும் என்றால் நன்கு ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும் எவ்வாறு அமர வேண்டும் என்றால் சுகாசனத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். ஒலியாகிய சப்தத்தைக் கேட்டு எளிய தியான முறையைக் கடைபிடித்தால் பல சித்திகளை எளிதில் பெற முடியும் என்கிறார்கள் சித்த யோகிகள்.
நாம் நமக்குச் சௌகரியமான இடத்தில் அமர்ந்துகொண்டு மோதிர விரல் என்று அழைக்கப்படும் நம் கைகளில் உள்ள நான்காவது பிறர் அதாவது சுண்டு விரலுக்குப் பக்கத்தில் இருக்கும் விரல்களைக் கொண்டு நாம் நமது இரு காதுகளையும் துவாரத்தை மூடிக் கொள்ள வேண்டும். அவ்வாறு நம் காதுகளை மூடிக் கொள்ளும்போது வெளிப்புறத்திலிருந்து எவ்வித சப்தமும் நமக்குக் கேட்காது நம் எண்ணம் நம் மனதை நோக்கி இறுதியில் சிந்திக்கும். அவ்வாறு நம் மனதை நோக்கிச் சிந்திக்கும்போது நாம் ஒருநிலைப்படும். அவ்வாறு காதுகளில் மூடிக்கொண்டு இருக்கும்போது அவன் வயிற்றில் ஒருவித சத்தம் கேட்கும் அந்தச் சத்தம் நமக்கு மட்டுமே கேட்கும்.முதலில் நாம் அவ்வாறு அமர்ந்து கொண்டு இருக்கும்பொழுது அவன் வயிற்றில் அந்தச் சத்தம் ஒலிக்கும் அவ்வாறு ஒலிக்கும்பொழுது வயிற்றில் உள்ள அனைத்து பிரச்சனைகள் நீங்கும் மற்றும் அந்தச் சப்தம் நமது காதுகளுக்கு மட்டும் கேட்கும். அவ்வாறு ஒலிக்கும் ஒலி ஒன்பது வகை ஒலிகளாக இருக்கும்.
என்ன அந்த 9வித ஒலிகள் என்பதை நாம் முதல் தெரிந்துகொள்ளலாம். அதற்கு முன்பாக நாம் கூறியபடி வயிற்றிலிருந்து ஒருவித ஒலி கேட்கும் என்று கூறினோம் அல்லவா அந்த ஓசை எவ்வாறு இருக்குமெனறால் ஊதுவது போலக் கேட்கும். அவ்வாறு கேட்கும்பொழுது தான் நம் வயிற்றில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் ஜீரணமாகி விடும்.
அந்த ஒன்பது வகை ஓசைகள் என்னவென்று பார்க்கலாம்.
கோஷம், காம்சயம், கொம்பு, கண்டாமணி, வீணை புல்லாங்குழல், துந்துபி, சங்கநாதம், மேககர்ஜனை.

இந்தப் பயிற்சி நாம் ஒரு நாளைக்கு இரண்டு நாழிகை செய்ய வேண்டும் அதாவது 48 மணி நிமிடங்கள் செய்ய வேண்டும்.


Meditation music

நாம் எப்பொழுது தியானம் செய்ய வேண்டும் என்பதை முன்னராகவே ஒரு பதிவில் தெரிவித்துள்ளார் அதாவது எப்பொழுது பிரபஞ்ச ஆற்றல் நம் உடலுக்குச் சீராகக் கிடைக்கும் என்பதை கூறி உள்ளோம் பிரபஞ்ச ஆற்றல்பற்றிய பகுதியில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அவரின் மழை மேகத்தில் வேகம் கர்ஜனை போன்ற சப்தம் கேட்டால் அவன் மரணங்கள் நீங்கிச் சூட்சமத்தை சூட்சமமாக உள்ள பிரம்மத்தை பர்திபான் மற்றும் ஒழிந்த பிரம்ம ஞானத்தை அடைவான்.

அந்த ஒன்பது வகை ஓசைகளைக் கேட்டு அவன் ஞானியான பிறகு அவனுக்கு ஓங்கார ஓசை உண்டாகும் அப்போது அந்த ஓங்கார ஓசை கேட்டு வந்தால் மிகச் சிறந்த ஞானத்தை பெறுவான். அவ்வாறு அந்த ஓம்கார ஓசையை ஆறுமதங்களுக்கு கேட்டு வந்தால் அவன் மகா யோகியாகி எல்லா மக்களுக்கும் சஞ்சரிக்கும் ஆற்றல் அவனுக்கு எளிதில் கிடைக்கும்.


சரி ஒவ்வொரு சப்தம் கேட்கும்பொழுது என்ன பலன் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.


ஓசைகள்


காம்சயம் ஒலி

காம்சயம் என்னும் ஓசையை ஒருவன் கேட்டால் சகலவித ஊகங்கள் மற்றும் பேய் பிசாசுகளை அடக்க வல்லவனாவான். எல்லாவித ஜீவன்களையும் நடக்கும் சித்தி கிடைக்கும்.

சிருங்கம் ஒலி
சிருங்கம் ஓசை என்றால் கொம்பின் நாதம் ஆகும். இந்த ஓசையைக் கேட்கும் நபருக்குச் சத்துருக்களை அழிக்கவும் மற்றும் அவன் நினைத்தபடி அனைவரையும் செயல்பட செய்ய வைக்க முடியும் சித்தியை அடைவான்.

கண்டாமணி ஒலி



கண்டாமனி

கண்டா மணி என்றால் பெரிய மணியைத் தான் கண்டாமணி என்று கூறுவார்கள்.கண்டா மணியின் ஓசை காதில் கேட்டு மற்றும் அதைப் பயிற்சி செய்து வந்தால் தேவர்களை வரவழைக்கும் அளவிற்கு சித்தியை அடைவான்.

வீணை ஒலி



வீணையின் நாதத்தை அப்பி யாசித்து அதாவது அவன் கேட்டு வந்தால் தூரதிருஷ்டி சக்திகளைச் சித்தி பெற்று ஞானியாகத் திகழ்வான். வீணையை பற்றி ஒரு செய்தி, வீணையை வாசித்தால் மோகினி மயங்கி வருவார் என்று அக்காலமே கூறியுள்ளார்கள்.

புல்லாங்குழல் ஒலி


புல்லாங்குழல்

புல்லாங்குழல் ஓசை ஒரு மென்மையான மற்றும் காதுகளுக்கு இனிமை தருகின்ற ஓசை ஆகும் இவ்வாறு புல்லாங்குழல் ஓசையை ஞானத்தின் மூலமாகக் கேட்டு வருபவன் சர்வ சித்திகளையும் அடைவான்.

துந்துபி  ஒலி

துந்துபி ஒலியைக் கேட்டு வருபவன் ஜனன மரணம் பந்தத்தை விட்டு விலகுவான் மற்றும் சுப யோக வாழ்க்கையை பெறுவான். 

மேக கர்ஜனை ஒலி

மேகத்தின் சத்தம் கேட்டு வருபவர் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் திறனைப் பெறுவார் அதாவது மேகங்களில் நடக்கும் சக்தியைப் பெறுவார்.


மேலே கூறியுள்ள ஒலிகளால் நாம் எவ்வித சித்திகளை அடைய முடியும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளோம் மற்றும் இது அனைத்தும் நாம் தினந்தோறும் இரண்டு நாழிகை செய்து வந்தால் தான் சித்திகளை அடைய முடியும்.


இன்றைய திருக்குறள்


திருக்குறள்


சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

- குறள் 27

 எவன் ஒருவன் சுவைைை, ஒளி, ஓசை, நாற்றம் மற்றும் ஊறு ஆகிய ஐந்தையும் நன்கு ஆராய்ந்துுு வருகிறார் மூளைையில் இருக்கிறது உலகம். ஆதலால் ஓசையும் ஒரு காரணமாக உள்ளதுு ஆதலால்  ஆசையைக் கொண்டு தியானம் செய்யுங்கள்.




கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.

(மேலும் புத்தம் புதிய  சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள்  subscribe(குழு சேர்)மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்துகொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).





மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏


மறுபிறவி (Reincarnation)...


அடுத்த பகுதியில் பார்க்கலாம் 👆....

கருத்துரையிடுக

0 கருத்துகள்