ஆத்மா மற்றும் ஆத்மாவின் ரகசியங்கள் (spirits and secret of spirits)



இந்த இணையத்தில் தருவது உங்கள்

 நேரமல்ல

 சிந்தனையின் முக்கியத்துவம்



ஆத்மா மற்றும் ஆத்மாவின் ரகசியங்கள்(Spirits and secret of Spirits)






நாம் ஏன் ஆத்மாவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டீர்கள் என்றால் நம் இணையதளத்தில் ஆவிகளுடன் அதாவது இறந்த ஆத்மாகளுடன்  பேசுவது எப்படி என்று கூறியுள்ளோம். அப்பதிவில் எவ்வாறு பேச வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளோம் மற்றும் ஆத்மாக்கள் உடன் பேசுவதற்கு முன்பே ஆத்மாக்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை இப்பதிவில் குறிப்பிட்டுள்ளோம்....


ஆத்மா(Spirit)

ஆத்மா என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்வோம். ஆத்மா என்பது மனிதனின் உடலில் உள்ள உயிராகும். அதாவது மனிதன் உயிருடன் இருக்கும் வரை அந்த ஆத்மாவுக்கு உயிர் ஜீவன் என்றும் உடல் மூலமாகக் கிடைக்கும். மனிதன் இறந்த பிறகு உயிர் ஜீவன் உடலை விட்டு வெளியே வந்து  இருப்பது தான் ஆத்மா. மனிதனின் உடலில் மூன்று பகுதியில் ஆத்மா பிரிந்து இருக்கும். அந்த ஆத்மா எந்தெந்த இடத்தில் எவ்வாறு பெயர் கொண்டிருக்கும் என்றால் உயிர் வயிற்றின் தொப்புள் பகுதியில் இருக்கும், மனிதனின் உயிரின் சக்தி இடுப்புப்பகுதியில் இருக்கும் மற்றும் வாதம் என்று கூறும் ஆத்மாவின்பகுதி தலை பகுதியில் இருக்கும். அவ்வாறு மூன்று இடத்தில் அந்த ஆத்மா பிரிந்து உடலில் இருக்கும். எப்பொழுது அந்த மனித உடலை விட்டு உயிர் வெளியேறுகிறது அப்பொழுது அந்த மூன்று பகுதிகளில் பிரிந்து உள்ள ஆத்மா ஒன்றாக வெளியே வரும் அவ்வாறு வெளியே வந்து விடுவது தான் மனிதன் இறந்து விட்டான் என்று கூறப்படுகிறது.

ஆவி என்று அழைக்கப்படும் ஆத்மாவுக்கும்  மற்றும் பேய் என்று அழைக்கப்படும் ஆத்மாவுக்கு என்ன வித்தியாசங்கள்...

முதலில் நாம் ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும் ஆவி வேறு பேய் வேறு.

அப்படியா ஆவி என்றால் என்ன பேய் என்றால் என்ன என்று நீங்கள் சிந்திக்கலாம்? நமக்குச் சிறுவயதிலிருந்து ஆவி பேய் என்றால் அச்சமூட்டும் சில கதைகள் மற்றும் பயமுறுத்தும் செய்திகளை நாம் தெரிந்து வலரந்து வந்திருக்கிறோம். 

ஆனால் ஆவி என்பது ஒரு மனிதன் தன் ஆயுள் காலம் முடிந்து முதுமை கண்டு இறந்து போகிறார்கள் தான் ஆவி என்று அழைக்கப்படுவார்கள். அவ்வாறு இறக்கும் மனிதர்கள் ஆவிகள் லோகத்திற்கு சுலபமாகச் சென்று விடுவார்கள்.


ஆனால் பேய் என அழைக்கப்படும் மனிதனின் ஆத்மா ஆயுட் காலம் முடிவதற்கு முன்பாகவே தற்கொலை இட்டோ அல்லது அகால மரணம் அடையும் ஆத்மா தான் பேய் என அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அவ்வாறு அகால மரணம் அடையும் ஆத்மாக்கள் மனதில் நாம் தவறு செய்து விட்டோம் என்று நினைத்து ஆவிகள் லோகத்திற்கு செல்வதற்கு முயற்சிக்கும்  ஆனால் ஆவிகள் லோகத்திற்கு அந்த ஆத்மாக்கள் செல்ல முடியாது ஆதலால் அந்த ஆத்மாக்கள் செல்ல முடியாத காரணத்தினால் கோபம் கொண்டு பழிவாங்கும் உணர்வை மேற்கொள்ளும். அவ்வாறு மேற்கொள்ளும் ஆத்மாக்கள் மன வலிமை குறைந்தவர்கள், ஆன்மிகப் பற்று இல்லாதவர்கள் மற்றும் சிறு குழந்தைகள்மீது சுலபமாக அவர்களின் உடலைக் கட்டுப்படுத்திக் கொள்ளும்.
எப்போதும் வழிகாட்டும் ஆத்மாக்கள் என்ன  கூறுகிறது என்றால் இப்பொழுதாவது ஒருவித அச்ச உணர்வு தோன்றுகிறதோ அப்பொழுது "ஓம் நம சிவாய நமஹ அல்லது உங்களுக்குப் பிடித்த இறைவனை நினைத்துக் கொண்டால் எவ்வித தீய ஆத்மாக்கள் உங்களை எதுவும் செய்ய முடியாது என்று கூறுகிறது. ஆத்மாக்கள் சில வகைகளும் உள்ளது, வழிகாட்டும் ஆத்மாக்கள், பழிவாங்கும் ஆத்மாக்கள், தீய செயல்களைத் தூண்டும் ஆத்மாக்கள், உண்மையைைச் சொல்லும் ஆத்மாக்கள், ஆசைகள் தீராத ஆத்மா, நேரில் தோன்றும் ஆத்மா மற்றும் பலவித ஆத்மாக்கள் அதாவது ஆவிகள் உள்ளது. ஆதலால் ஆத்மாக்களை பற்றி நன்கு தெரிந்தவர்கள் மட்டும் ஆவிகளுடன் பேச முயற்சியுங்கள் அவ்வாறு ஆவிகளைப் பற்றி அறிந்திருந்தாலும் ஒரு நல்ல குரு இல்லாமல் ஆத்மாக்களுடன் பேச முயற்சிக்க வேண்டாம்.... எப்பொழுதும் இறைவன் பக்தி இருந்தால் எல்லாம் நன்மையாகவே நடக்கும். ஆதலால் எப்பொழுதும் ஆத்மாக்களுடன் பேச முயற்சிக்க வேண்டும்....


ஆத்மாக்களின் ரகசியம்

ஆத்மாக்கள் மனித உடலை விட்டுப் பிரிந்து செல்லும்பொழுது. அந்த உடலில் இருக்கும் அன்பு உடலில் இருக்கும் பகுதி அந்த உயிராத்மா சுற்றித் திரியும்.
ஒரு மனிதன் இறந்த பிறகு அந்த உயிராத்மா முதல் மூன்று நாட்கள் அந்த உயிர் இருந்த இடத்தில் இருக்கும் நீரில் இருக்கும். பிறகு அந்த உயிராத்மா அடுத்த மூன்று நாட்கள் நெருப்பில் இருக்கும். அந்த உயிராத்மா தம்மை யாராவது துக்கம் விசா இருக்கிறார்களா என்று காய்ந்து கொண்டே இருக்கும். யாரெல்லாம் வருகிறார்கள் என்று கவனிப்பு இருக்கும். அதன்பிறகு அந்த ஆத்மாக்கள் கொடுக்கவேண்டிய திதிகளை கொடுத்பதற்கு முன்பு. அந்த ஆத்மா  பசியுடன் இருக்கும். நாம் திதியின் பொழுது கொடுக்கும் பிண்டங்கள் அந்த ஆத்மா சாப்பிட்டுவிட்டு  திதி கொடுக்கும் நபரை வாழ்த்திச் செல்லும்.
ஆத்மாக்கள் நாம் பதினாறாம் நாள் இறந்த ஆத்மா கூறிய வணக்கத்தையும் மரியாதையுடன் செலுத்திய பிறகு (அதாவது காரியம் என்று அழைப்பார்கள்). அந்த ஆத்மா உலகத்தை விட்டு நடந்து  எம லோகத்திற்கு செல்லும். அவர் நடந்து செல்லும் நாட்கள் ஒரு வருடங்கள் ஆகும். ஆதலால் தான் எவரேனும் இறந்து விட்டார்கள் என்றால் அந்த வீட்டில் ஒருவர் இது உங்களுக்கு எந்தத் தெய்வீக காரியங்கள் நடைபெற கூடாது என்பார்கள்.
ஆத்மாக்கள் என்பது ஒரு சிறு உயிராகவும் அலைகள் மனித உடலில் கொண்டு தன் சக்தியைப் பிரபஞ்ச சக்தியின் மூலமாகப் பெருக்கிக் கொள்ளும்.

முக்கியமாக ஒன்றை நாம் இதில் கூறவும் எப்பொழுதும் ஆத்மாக்களுக்கு நாம் செய்யவேண்டிய காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் ஏனென்றால் ஆத்மாக்கள் அப்பொழுது சுலபமாக ஆத்மா லோகத்திற்கு செல்லும். நாம் பேய்  என்னவென்று முன்பே கூறியுள்ளோம் அவர் அகால மரணம் அடையும் ஆத்மாக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் செய்து முடித்தால் பேயாகத் தெரியுமா ஆத்மாக்களின்
 கோபம் குறையும் மற்றும் அந்த ஆத்மாக்களும் ஆவிகள் லோகம் செல்வதற்கு வழிகள் கிடைக்கும்.ஆதலால் எப்பொழுதும் இறந்த ஆத்மாவுக்கு செய்யவேண்டிய ஒரு வணக்கத்தைத் தவறாமல் செய்ய வேண்டும்.

நம் வீட்டில் இறந்த முன்னோர்களின் ஆத்மாக்கள் வருடத்திற்கு ஒருமுறை அவர்கள் இறந்த திதி அன்று நம் வீட்டில் வந்து பார்ப்பார்கள் நம் ஏதேனும் அவர்களுக்குச் செய்து படையல் இருக்கிறோமா என்று அவ்வாறு  அவர்களை நியபகம் கொண்டு அந்த ஆத்மாவிற்கு வருடத்திற்கு ஒருமுறை அவர்கள் இறந்த திதி அன்று படையை விட்டோம் என்றால் அந்த ஆத்மா நம்மை வாழ்த்திவிட்டு மற்றும் மகிழ்ந்து செல்லும்.....

ஆதலால் எப்பொழுதும் நம் முன்னோர்களின் ஆத்மாவை நினைவில் கொண்டு வணங்கினால் நல்லது.


கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.

(மேலும் புத்தம் புதிய  சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள்  subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்து கொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).





மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏




அடுத்த பதிவில் பார்ப்போம்👆....

கருத்துரையிடுக

0 கருத்துகள்