இந்த இணையத்தில் தருவது உங்கள்
நேரமல்ல
சிந்தனையின் முக்கியத்துவம்
மூச்சுப்பயிற்சி(Breathing exercise)
மூச்சுக் காற்றின் ஆற்றல்...
நாம் முன்பே கூறியுள்ளோம் நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் செய்கின்ற விஷயங்களில் அனைத்திலும் ஒவ்வொரு ஆற்றல்கள் உள்ளது அதே போல் தான் நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றிலும் அபரிமிதமான சக்தி உள்ளது.
நாம் வாழும் ஆயில் காலத்தையே மாற்றி அமைக்கும் அளவிற்கு மூச்சுக் காற்றின் ஆற்றல் உள்ளது.
| ஆயுளை கட்டுப்படுத்தும் மூச்சு காற்று|
நாம் ஆயுளை கட்டுப்படுத்தும் மூச்சுக்காற்றின் தலைப்பிலேயே கூறியுள்ளோம் சரியான மற்றும் முறையான பயிற்சியினால் நம்மால் நம் ஆயுள் காலத்தை மாற்றி அமைக்க முடியும் என்று.
நாம் இப்பொழுது எனத் தெரிந்துகொள்ள இருக்கிறோம் என்றால் நாம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காக நாம் விடுகின்ற மூச்சுக்காற்று எவ்வாறு நம் உடலில் உயிர் சக்தியாக மாறி நம்மை ஆரோக்கியமும் மற்றும் ஆற்றல்மிக்க உயிராகவும் அமைகிறது என்று தெரிந்து கொள்வோம்.
மூச்சு பயிற்சி
மூச்சு பயிற்சி செய்வது எப்படி?
மூச்சுப்பயிற்சி எவ்வாறு செய்ய வேண்டும் என்றால் ஒரு இடத்தில் நமக்கு வசதியான ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு நன்றாக மூச்சு காற்றை சுவாசித்து உள்வாங்கி மற்றும் வெளியே நன்றாக விட வேண்டும், பிறருக்கு மூச்சுப் பயிற்சி செய்வதற்கு உங்களுடைய கைகளைக் கொண்டு மூக்கின் ஒரு துவாரத்தை அடைத்துக் கொண்டு மற்றொரு முக்கிய நன்கு மூச்சு காற்றை சுவாசிக்க வேண்டும் பிறகு சுவாசித்த துவாரத்தை மூடிக்கொண்டு மற்றொரு முக்கியக் துவாரத்தின் வழியாகக் காற்றை வெளியேற்ற வேண்டும், பிறகு வெளியேற்றிய மூக்கின் ஓட்டை வழியாகவே மீண்டும் சுவாசத்தை உள்வாங்க வேண்டும் பிறகு அதை மூடிக் கொண்டு மற்றொரு பகுதியில் மூச்சுக் காற்றை வெளியேற்ற வேண்டும்.
மேலே உள்ள புகைப்படத்தைக் கண்டு எவ்வாறு நம் மூக்கு துவாரங்களை கைகளைக் கொண்டு மூடி மூச்சு பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நாம் விடுகின்ற ஒவ்வொரு முயற்சியும் நீண்ட சுவாசமாக இருக்க வேண்டும் அவ்வாறு நீண்ட சுவாசம் இருக்கும்பொழுது ஒரு நிமிடத்திற்கு 15 முறை மட்டுமே மூச்சு விடுவோம் அவ்வாறு 15 முறை மூச்சு விட்டால் இயற்கையின் நியதிப்படி 120 ஆண்டுகள் வாழ முடியும் என்று சில நூல்கள் கூறுகிறது.
நீண்ட மூச்சு விடுவதால் நம் மனம் அழுத்தம் குறைந்து ஒரு நிலையாகச் சிந்திக்க இயலும்.
எவ்வாறு மூச்சுக் காற்றினால் நம் உடல் ஆரோக்கியம் பெறுகிறது என்று பார்ப்போம்.
நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது அந்த ஏழு சக்கரங்களும் நம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அந்த ஏழு சக்கரங்களிலிருந்து பிரபஞ்ச ஆற்றல் பரிபூரணமாகக் கிடைக்கும் மற்றும் நம் உடலில் உள்ள வலிகளை அனைத்தும் அந்தப் பிரபஞ்ச சக்தியின் மூலம் நாம் சரி செய்ய முடியும்.
நாம் விடுகின்ற மூச்சு காற்று ஒவ்வொரு சக்கரங்களுக்கும் எவ்வளவு நேரம் மூச்சுக் காற்றினால் சக்தி இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.
நாம் எப்பொழுதும் ஒரு நாள் என்றால் 24 மணி நேரம் கணக்கு உள்ளது. அந்த 24 மணி நேரம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை.
நாம் உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தலைப்பில் மற்றும் அதன் செயல்களை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் பதிவில் ஒரு தலைப்பாக 7 சக்கரங்களைப் பற்றி மற்றும் அதன் பெயர்களைத் தெளிவாகக் கூறியுள்ளோம்.
நாம் காலை 6 மணி முதல் காலை 6:40 வரை நிமிடத்திற்கு 15 மூச்சு கணக்கில் 40 நிமிடங்களுக்கு ஆறு நூறு முறை சுவாசிக்கிறோம். அந்த 40 நிமிடங்கள் சுவாசிக்கும் காற்று மூலாதாரச் சக்கரத்திற்கு செல்கிறது.
பிறகு சுவாசிக்கும் அதாவது 6:40 மணி நேரத்திலிருந்து நண்பகல் ஒரு மணி 20 நிமிடம்வரை நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்று எண்ணிக்கை 6 ஆயிரம் முறை ஆகும். அந்த 6000 முறை சுவாசிக்கும் மூச்சுக்காற்று சுவாதிஷ்டான சக்கரத்திற்கு செல்கிறது.
அதன் பிறகு நாம் சுவாசிக்கும் காற்று நண்பகல் ஒரு மணி 20 நிமிடம் முதல் இரவு 8 மணிவரை சுவாசிக்கும் காற்றின் அளவு 6000 ஆகும்.அவ்வாறு சுவாசிக்கும் 6 மணி நேரம் 40 நிமிடங்களுக்குச் சுவாசிக்கின்ற காற்று மணிப்பூரச் சக்கரத்திற்கு செல்கிறது.
மணிப்புறா சக்கரத்திற்கு அந்தஆறு மணி நேரம் 40 நிமிடங்களுக்குச் சுவாசிக்கும் காற்று சென்றபிறகு இரவு 8 மணி முதல் நள்ளிரவு 2 மணி 40 நிமிடங்கள்வரை சுவாசிக்கும் காற்றின் அளவு அதேபோல் 6 ஆயிரம் முறை சுவாசிக்கிறோம். அப்பொழுது சுவாசிக்கும் மூச்சுக்காற்று அநாஹத சக்கரத்திற்கு சென்று அதன் ஆற்றலை அதிகரிக்கிறது.
பிறகுநள்ளிரவு 2 மணி 40 நிமிடங்கள் முதல் 3 மணி 46 நிமிடங்கள்வரை 1000 மூச்சுக் காற்றை சுவாசிக்கிறோம் அவ்வாறு சுவாசிக்கும் காற்று விசுத்தி சக்கரத்திற்கு சென்று அதனின் ஆற்றலை அதிகரிக்கிறது.
பின் இரவு 3 மணி நாற்பத்து ஆறு நிமிடம் முதல் காலை 4 மணி அம்பத்தி 53 நிமிடங்கள்வரை சுவாசிக்கும் மூச்சுக் காற்று ஆக்ஞாச் சக்கரத்திற்கு செல்கிறது.
காலை 4 மணி 53நிமிடத்தில் இருந்து காலை 6 மணிவரை சுவாசிக்கும் மூச்சுக் காற்றின் அளவு ஆயிரம் ஆகும் அப்போது சுவாசிக்கும் மூச்சுக்காற்று சகஸ்ரார சக்கரத்திற்கு செல்லும்.
நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு சக்கரங்களுக்குச் சென்று அந்தச் சக்கரம் இருக்கும் இடத்தில் உள்ள உறுப்புகள் அனைத்தும் இருக்கும் வலிகளை மற்றும் வேதனைகளை அகற்றி மற்றும் நன்றாக அந்த உறுப்புகள் செயல்பட வைக்கிறது.
நான் சுவாசிக்கும் காற்று நிதானமாகவும் மற்றும் நீண்ட சுவாசம் கொண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள்...
இன்றைய திருக்குறள்
திருக்குறள்
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
- குறள் 331
நிலையில்லா பொருளை நிலையானது என்று எண்ணி அதன் மீது ஆசை கொள்வது அர்த்தமில்லாத ஒன்று ஆகும். ஆதலால் எப்போதும் நிலையான இறைவனை நினைத்து நன்றாக வாழுங்கள்.
கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.
(மேலும் புத்தம் புதிய சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள் subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்துகொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).
மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏
கர்ம வினை (Karma)
அடுத்த பகுதியில் பார்க்கலாம் 👆....
0 கருத்துகள்