ஆயுளை கட்டுப்படுத்தும் மூச்சு (Control your life by breathing)



இந்த இணையத்தில் தருவது உங்கள்

 நேரமல்ல

 சிந்தனையின் முக்கியத்துவம்





ஆயுளை கட்டுப்படுத்தும் மூச்சு(Control your life by breathing) 



Breathing




நாம் இந்தப் பதிவில் என்ன காண இருக்கிறோம் என்றால் நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்று மூலம் நம் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும் மற்றும் குறைக்க முடியும்.  உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் சுவாசித்து உயிர் வாழ்கிறது. ஒவ்வொரு உயிர்களும் அதாவது ஐந்தருவி ஜீவன்கள் அனைத்தும் இயற்கையின் விதிப்படி ஒவ்வொரு உயிரினங்கள் எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும் என்று இயற்கை விதித்துள்ளது அதேபோல் அனைத்து உயிரினங்களும் வாழ்ந்து வருகிறது. ஆனால் மனிதனுக்கு மட்டும் இயற்கையின் விதிகளிலிருந்து ஆயுட்காலத்தை அதிகரிக்கவும் மற்றும் குறைக்கவும் இயலும்.

மூச்சுக்காற்று எவ்வாறு நம் ஆயில் காலத்தைக் கட்டுப்படுத்துகிறது என்றால் நான விடுகின்ற மூச்சுக்காற்று மூலம் நமது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்மானம் அடைகிறது.

நாம் எப்போதும் மூச்சுப் பயிற்சியைப் பயந்து வந்தால் மற்றும் பயிற்சியைத் தினமும் செய்து வந்தால் நமது உடல் மற்றும் நமது வாழ்வு ஆரோக்கியமாக நலமாக இருக்கும். மூச்சு பயிற்சியின் மூலம் நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களுக்குத் தேவையான பிரபஞ்ச ஆற்றல் பொறுமையாக மற்றும் சீராகக் கிடைக்கும் அவ்வாறு பிரபஞ்ச ஆற்றல் சீராக மற்றும் பொறுமையாக ஏழு சக்கரங்களுக்கும் கிடைக்கும்பொழுது அந்த ஏழு சக்கரங்களும் சீராகத் தனது வேலையைச் செய்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
நம் உடலில் உள்ள ஏழு சக்கரங்கள்பற்றித் தெளிவாக நம் பதிவில் கூறியுள்ளோம். 7 சக்கரங்களைப் பற்றித் தெரியவில்லை என்றால் இப்பதிவை தெளிவாகப் படித்து முடித்தபிறகு அதைத் தெரிந்து கொள்ளுங்கள். |ஏழு சக்கரங்கள்|

நம் தலைப்பில் இருக்கும்படி நம மூச்சு காற்று எவ்வாறு நம்மைக் கட்டுப்படுத்தி இருக்கிறது மற்றும்நம் முன்னோர்கள் எவ்வாறு நீண்ட ஆயுள் காலம் அதாவது 120 ஆண்டுக் காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள் என்று தெளிவாகக் காணலாம்.

இயற்கையின் விதிப்படி ஒவ்வொரு உயிரினமும் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு காற்றை சுவாசிக்க வேண்டும் என்று கணக்கு உள்ளது. அக்கால மனிதர்கள் ஒவ்வொரு உயிரினங்களும்  எத்தனை தடவை ஒரு நிமிடத்திற்கு சுவாசிக்க வேண்டும் மற்றும் சுவாசித்து இருக்கிறார்கள் என்று ஆராய்ந்து அறிந்து கூறியுள்ளார்கள்.
எந்த உயிரினங்கள் குறைவாக ஒரு நிமிடத்திற்கு சுவாசிக்கிறது அதாவது எத்தனை முறை ஒரு நிமிடத்திற்கு சுவாசிக்கிறது குறைவான சுவாசம் உதாரணமாக ஒரு நிமிடத்திற்கு இரண்டு முறை மட்டும் சுவாசிப்பது ஆகும்.
எந்த உயிரினங்கள் மூச்சுக்காற்றை குறைந்த அளவு ஒரு நிமிடத்திற்கு சுவாசிக்கிறது அந்த உயிரினம் நீண்ட ஆயுள் கொண்டு வாழும்.


அக்கால மக்கள் மூச்சு காற்று சுவாசித்த எண்ணிக்கை...


நாம் சிந்திக்கலாம் அப்போது நாமும் ஒரு நிமிடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் சுவாசித்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்று யோசிக்கலாம் ஆம் நம்மால் வாழ முடியும் ஆனால் இன்றைய சூழ்நிலையில் நம்மால் அவ்வாறு இருக்க முடியாது. அப்போ அக்கால மக்கள் மட்டும் எவ்வாறு நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள் என்று யோசிக்கலாம் நீங்கள்.நன்றாகத் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் அக்கால மக்கள் அனைவரும் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் என ஒருநாள் களுக்கு 21600 முறை சுவாசித்து வந்தார்கள். அவ்வாறு ஒரு நாளைக்கு 21,600 முறை மூச்சு காற்று சுவாசிக்கும் மனிதர்கள் அனைவரும் 120 ஆண்டுகள் வாழ்ந்துவந்தனர் மற்றும் அதே தான் இயற்கையின் நியதி ஆகும்.


இக்கால மக்கள் முறையற்ற வாழ்க்கையில் ஆனா மனதால் மற்றும் அமைதியற்ற நிலையினால் சுவாசத்தின் மூச்சுக்காற்று அதிகமாகி உள்ளது எவ்வாறு என்றால் தற்போது ஒரு நிமிடத்திற்கு மனிதர்கள் 18 முதல் 21 முறை மூச்சு வீடும் நிலை மாறிவிட்டது.

அதாவது மிகக்குறைவான அளவு சுவாசித்து வாழும் கடல் ஆமைபற்றித் தெரிந்துகொள்ளலாம். அனைவரும் கூறுவார்கள் அவர்கள் 300 ஆண்டுகள் உயிருடன் வாழும் என்று எவ்வாறு 300 ஆண்டுகள் ஆகின்றது என்று தெரிந்துகொள்ளுங்கள். 
கடலில் வாழும் ஆமைகள் ஒரு நிமிடத்திற்கு 4 முறை சுவாசிக்கும் அவ்வாறு நான்கு முறை மட்டும் ஒரு நிமிடத்திற்கு சுவாசிக்கும் கடலாமை 300 ஆண்டுகள் வாழ்கிறது.



Tortoise


நீங்கள் சிந்திக்கலாம் மூச்சுக் கற்றை மெதுவாகச் சுவாசிக்கும்பொழுது நாம் அதிக ஆண்டுகள் வாழ முடியும் என்றும் அதிகம் சுவாசித்தால் எவ்வாறு குறைந்த ஆண்டு வாழ்கிறோம் என்று கூறுகிறீர்கள் என்று கேட்கலாம்.

குறைந்த அளவு சுவாசித்து 300 ஆண்டுகள் வாழ்கிறது ஆமை அதேபோல் ஒரு நிமிடத்திற்கு 28 தடவை மூச்சுவடும் நாய் 12 முதல் 14 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் வாழ்கிறது.


Dog dp


மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிரினமும் ஆயுளை அதிகரித்துக்கொள்ள குறைத்துக் கொள்ளவும் முடியாது. ஒரு நிமிடங்களுக்கு 30 முறை சுவாசிக்கும் மனிதர்கள் 60 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கிறார்கள்.


முறையான பயிற்சி கொண்டு ஒரு மனிதனால் ஒரு நிமிடத்திற்கு 7 அல்லது 8 முறை சுவாசிக்கும் அளவிற்கு தனது மூச்சு காற்றின் அளவை குறைக்க முடியும் அவ்வாறு ஒரு மனிதன் ஏழு அல்லது எட்டு முறை சுவாசித்தால் என்றால் 240 ஆண்டு வருடம் வாழ முடியும்.இயற்கையின் நியதிப்படி ஒரு மனிதன் 120 ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும் அவ்வாறு நாம் தகுந்த பயிற்சியுடன் மூச்சுவிடும் அளவை மாற்றும்பொழுது நம்மால் இயற்கையின் விதியை மாற்றி அமைக்க முடியும்.

அக்கால மக்கள் எவ்வாறு அதிக ஆயுளுடன் வாழ்ந்தார்கள் என்றால் வெறும் சத்துமிக்க உணவு மட்டுமல்ல நாம் சுவாசிக்கும் பிராண சக்தியான மூச்சு காற்றின் மூலமாகவும்  ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்து வந்தனர்.

இன்றைய திருக்குறள்


திருக்குறள்...



இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

- குறள் 5

எவனொருவன் இறைவன் மீதுஅதிக அளவு அன்பு மற்றும் நம்பிக்கை வைத்திருக்கிறானோ அவனிடம் எவ்வித தீவினையும் வந்து சேராது.
எந்தப் பயிற்சியாக இருந்தாலும் இறைவனை நினைத்துத் தொடங்கினால் அந்தப் பயிற்சியில் நாம் எப்பொழுதும் நிச்சயம் வெற்றி பெறுவோம்.


கருத்துகள் இருந்தால் comment-ல் கூறுங்கள்.

(மேலும் புத்தம் புதிய  சிந்தனைகளை உயர்த்த இனையுங்கள்  subscribe(குழு சேர்). மேலும் புதிய சிந்தனைகள் வந்தவுடன் தெரிந்துகொள்ள NOTIFICATION BUTTON click செய்யுங்கள்).





மீண்டும் ஒரு நல்ல சிந்தனையுடன் சந்திக்கலாம்....
🙏நன்றி🙏



       மூச்சு பயிற்சி(Breathing exercise)


அடுத்த பகுதியில் பார்க்கலாம் 👆....

கருத்துரையிடுக

0 கருத்துகள்